Published:Updated:

தி.மு.க. என்ன நிலையில் உள்ளது என தெரிந்துவிட்டது: ஞானதேசிகன்

Vikatan Correspondent
தி.மு.க. என்ன நிலையில் உள்ளது என தெரிந்துவிட்டது: ஞானதேசிகன்
தி.மு.க. என்ன நிலையில் உள்ளது என தெரிந்துவிட்டது: ஞானதேசிகன்
தி.மு.க. என்ன நிலையில் உள்ளது என தெரிந்துவிட்டது: ஞானதேசிகன்

சென்னை: இலங்கை விவகாரத்தால் பிரிந்து சென்ற தி.மு.க. என்ன நிலையில் உள்ளது என தெரிந்துவிட்டது என்று ஞானதேசிகன் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் பேசினார். அப்போது, ''நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்கள்.

நாடாளுமன்றத்த்தில் எதிர்கட்சியாக அமர காங்கிரஸ் தயாராக உள்ளது. இலங்கை பிரச்னை தமிழகத்தில் ஒரு பிரச்னையே அல்ல. இலங்கை விவகாரத்தால் பிரிந்து சென்ற தி.மு.க. என்ன நிலையில் உள்ளது என தெரிந்துவிட்டது" என்றார்.