Published:Updated:

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறோம்: கருணாநிதி கருத்து!

Vikatan Correspondent
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறோம்: கருணாநிதி கருத்து!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறோம்: கருணாநிதி கருத்து!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறோம்: கருணாநிதி கருத்து!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறோம் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

16வது நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் அ.தி.மு.க. 37 இடங்களிலும், பா.ஜ.க. கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஒரு இடத்தில் கூட தி.மு.க. முன்னிலை பெறாத நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ''மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என கருதி தேர்தல் முடிவுகளை ஏற்கிறோம்'' என்றார்.

மேலும், தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.