. தெ.ன்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் அலுவலகத்தில், பாடி பில்டர்களின் சிலைகள் புஜ பலம் காட்டு கின்றன. ''பேட்டி, அரசியல் பத்தியா... சினிமா பத்தியா?'' - சிரித்தபடியே என்னை எதிர்கொள்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்!.
''அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைக்கும் மூடுக்கு வந்துட்டீங்களா?''

''கூட்டணி இன்னும் முடிவாகலை. பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி இப்போ வரை உறுதியா இல்லை. மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலைகளைச் சிலர் பண்றாங்க. இப்படி அரசியல் சூழல் ரொம்பக் குழப்பமா, புதிரா இருக்கு. இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பலை. இந்த முறை சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்கள் சட்டமன்றத்துக்குப் போயே ஆகணும். அப்போதான் நாங்க நினைச்ச பாதையில் கட்சியைக் கட்டமைக்க முடியும்!''

''தி.மு.க ஆட்சி எப்படி இருக்கு?''

''ஆந்திராவில் இருந்து காப்பி அடிக்கப்பட்டாலும்... கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நல்ல விஷயம். ஆபரேஷன் செலவை மட்டும் அரசு ஏத்துக்கிட்டாப் போதாது... மருந்து மாத்திரைகள் செலவையும் ஏத்துக்கணும். அப்போதான் ஏழை மக்கள் உண்மையிலேயே பலன் அடைவாங்க. ஆனா, எந்தப் பொருளையும் இலவசமாகக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது மக்களை இன்னும் சோம்பேறி ஆக்கிவிடும். இலவசம் வழங்கலாம்னு முடிவுஎடுத்துட்டா... கல்வி, வேலைவாய்ப்புகளை இலவசமாகக் கொடுக்க வேண்டியதுதானே? இலவசக் கல்வி, உடனடி வேலைவாய்ப்பு கொடுத்தால்... அப்புறம் ஏன் அவங்க அரசாங்கத்துக்கிட்ட கையேந்தி நிக்கப் போறாங்க? மக்களை அறிவில், பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதுதான் நல்ல அரசுக்கான அடையாளம்!''

''உங்களுக்கு அடுத்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் நல்ல வளர்ச்சி காண்பிக்கிறாரே?''

''அவர் எனக்கு முன்னாடி தனிக் கட்சி ஆரம்பிச்சவர். 'ஒரு மாற்றுக் கட்சி வராதா?’ன்னு பலரும் ஏங்கிட்டு இருந்த சமயத்தில், கட்சி ஆரம்பிச்சு ஓப்பனிங் ஹிட் கொடுத்துட்டார். நான் தனிக் கட்சி ஆரம்பிக்கணும் என்கிற எண்ணத்தில் அரசியலுக்கு வரலை. சூழ்நிலை என்னையும் தனிக் கட்சி ஆரம்பிக்கவெச்சது. தொலைநோக்குப் பார்வையோடு நான் வெளியிடும் அறிக்கைகள், நடுநிலையான, நேர்மையான பேச்சுக்கள் மக்களால் பாராட்டப்படுகின்றன. வீட்டுக்கு ஒரு விவசாயி, அரசியலில் இளைஞர்கள் எனப் பல திட்டங்களை இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்த இருக்கிறேன். இன்னும் ஐந்து ஆண்டுகளில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வலுவான ஒரு கட்சியாக மாறியிருக்கும்!''

''விஜய்யின் 'காவலன்’ படத்தை வெளியிடவிடாமல், செம பாலிடிக்ஸ் நடந்ததே?''

''நஷ்டத்தில் பங்கெடுத்துக்கணும்னு விநியோகஸ்தர்களுக்கும் விஜய்க்கும் பிரச்னை வந்தப்ப, எங்களிடம் பிரச்னையைக் கொண்டுவந்தார். நாங்க தீர்த்துவெச்சோம். 'காவலன்’ ரிலீஸ் பிரச்னையை அவர் எங்களிடம் கொண்டுவரலை. அதனால், நாங்க அதில் தலையிடலை. சேவை எண்ணத்தோடு விஜய் வந்தா, அவரை நான் அரசியலுக்கு வரவேற்கிறேன். சுயநலத்துக்காகவோ, நிர்பந்தத்துக்காகவோ அரசியலுக்கு வரக் கூடாது. மற்றபடி, நடிகர்கள் அரசியலுக்கு வரவே கூடாதுன்னு ராமதாஸ் சொல்றதை நான் எதிர்க்கிறேன். டாக்டர்கள் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு நாங்க சொன்னா, ராமதாஸ் ஏத்துப்பாரா? ஏன், நடிகர்களுக்கு அறிவு கிடையாதா? ஆற்றல் கிடையாதா? விவாதம் பண்ண நான் ரெடி... ராமதாஸ் ரெடியா?''

''தமிழ் சினிமாவில் கலைஞரின் குடும்ப ஆதிக்கம் இருப்பது உண்மையா?''

''நிச்சயமா! தியேட்டர் கிடைக்கிறது, ஆர்ட்டிஸ்ட் கிடைக்கிறது, படம் விநியோகம்னு எல்லாமே அரசியல் ஆகிப்போச்சே. அரசுக்கு எதிராகப் பேசுபவர்களோ, எதிராகக் கருத்து சொல்பவர்களோ... படம் தயாரிக்க,

நடிக்க முடியாதுன்னா, அது நல்ல ஜனநாயகமா?''

''இவ்ளோ நல்ல விஷயங்கள் பேசுறீங்க... ஆனா, உங்க கட்சிக்கு நாடார் கட்சின்னு சாதி முத்திரைதானே இருக்கு?''

''அப்படின்னா... விஜயகாந்த் கட்சியை நாயுடு கட்சின்னு சொல்வீங்களா? என்னைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜ் ஒரு சமுதாயத்தில் பிறந்து இருந்தாலும், அனைத்து சமூகங்களையும் அரவணைத்து ஆதரித்து வளர்த்தார். அந்தப் பண்பு எனக்கு உண்டு. நான் நாடார்கள் மட்டும் வளரணும்னு ஆசைப்படலை. நாட்டு மக்கள் வளரணும்னு ஆசைப்படுறேன்!''