Published:Updated:

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி: ஜெயலலிதா நெகிழ்ச்சி

Vikatan Correspondent
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி: ஜெயலலிதா நெகிழ்ச்சி
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி: ஜெயலலிதா நெகிழ்ச்சி
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி: ஜெயலலிதா நெகிழ்ச்சி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, தோழமைக் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி அரசின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். அதிமுக தனது பொறுப்பை உணர்ந்து செயல்படும் என்றார்.

மத்திய அரசுடன் நட்பு

மேலும், புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவைக்கும், பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய மத்திய அரசுடன் நட்பு அரசாக இருக்க விரும்புகிறேன்'' என்றும் அவர் கூறினார்.