Published:Updated:

நீலகிரி தொகுதியில் காங். வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்கள்!

Vikatan Correspondent
நீலகிரி தொகுதியில் காங். வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்கள்!
நீலகிரி தொகுதியில் காங். வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்கள்!
நீலகிரி தொகுதியில் காங். வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்கள்!

ஊட்டி: நீலகிரி தொகுதியில் காங். வேட்பாளரைவிட அதிக ஓட்டுக்கள் பெற்று நோட்டா 3வது இடத்தில் உள்ளது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கோபாலகிருஷ்ணன், தி.மு.க. வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, காங்கிரஸ் வேட்பாளராக காந்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக குருமூர்த்தி அறிவிக்கப்பட்டார். ஆனால், கட்சியின் அங்கீகார கடிதத்தை உரிய நேரத்தில் வழங்காததால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.  15வது சுற்றில், அ.தி.மு.க. 3,92,276 வாக்குகளும், தி.மு.க. 3,12,465 வாக்குகளும் பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி 38,011 வாக்குகள் பதிவாகி நோட்டா மூன்றாவது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 32,713 வாக்குகளையும், 5வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 10,506 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.