Published:Updated:

அ.தி.மு.க. வெற்றியால் தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு வேலை இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

Vikatan Correspondent

சென்னை: அ.தி.மு.க. வெற்றியால் தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று காலை போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். அதன்பி செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்த முடிவுதான் வந்திருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையை வைத்துதான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினோம்.

இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழ்நாட்டில் அம்மா அலைதான் வீசியது. முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின் போது 'லேடி' அலை வீசுவதாக கூறினார். அது இப்போது நிரூபணம் ஆகி உள்ளது.

அ.தி.மு.க. பெற்றுள்ள இந்த வெற்றி மூலம், தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது" என்றார்