Published:Updated:

குஜராத், டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை!

Vikatan Correspondent
குஜராத், டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை!
குஜராத், டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை!
குஜராத், டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை!

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னணியில் உள்ளது.

16வது நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல்வராக உள்ள குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.

அதேபோல், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னணியில் உள்ளது.

டெல்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. இருப்பினும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தைக்கூட அக்கட்சி கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.