Published:Updated:

தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல: நடிகை குஷ்பு!

Vikatan Correspondent
தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல: நடிகை குஷ்பு!
தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல: நடிகை குஷ்பு!
தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல: நடிகை குஷ்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து,  சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு நடிகை குஷ்பு இன்று காலை வந்தார். அங்கு கருணாநிதியை சந்தித்துப் பேசிய குஷ்பு, தேர்தல் தோல்வி குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து குஷ்பு பேசும்போது, ''நாங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தபோது 2004 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். தற்போது நிச்சயமாக நேரம் மாறியிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும்" என்றார்.

அதன்பின், தி.மு.க.வின் பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா? என்று கேட்டதற்கு, ''அப்போது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கு ஊழல் தான் காரணம் என்று சொல்லுகிறீர்களா?" என்றார்.