Published:Updated:

திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது: மு.க. அழகிரி

Vikatan Correspondent
திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது: மு.க. அழகிரி
திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது: மு.க. அழகிரி
திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது: மு.க. அழகிரி

மதுரை: திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டதாக அக்கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மதுரையில் இருந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. கட்சியில் கருணாநிதியின் தலையீடு இல்லாததுதான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம்.

தற்போது தி.மு.க. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை. கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாகவே அவர் பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள் பல்வேறு சதி நடைபெற்றது. பணம் கொடுத்தவர்களுக்கு தான் சீட் வழங்கப்பட்டது. அப்போதே இதை நான் சுட்டிக்காட்டினேன். இருப்பினும், அப்போது நான் 5 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க.வில் உள்ள சர்வாதிகார போக்கும் இந்த தேர்தலில் தோல்விடைய ஒரு காரணமாகும். மேலும், தி.மு.க. மீதான எதிர்ப்பு, தி.மு.க. உட்கட்சி பிரச்னையால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது'' என்றார்.

மேலும் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதையும் குறைகூறிய மு.க. அழகிரி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு சீட் வழங்கி இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.