Published:Updated:

குஜராத்தில் பலித்த மோடி வித்தை!

குஜராத்தில் பலித்த மோடி வித்தை!

குஜராத்தில் பலித்த மோடி வித்தை!

குஜராத்தில் பலித்த மோடி வித்தை!

Published:Updated:
குஜராத்தில் பலித்த மோடி வித்தை!

'இனிமேல் எதையும் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னேறிச் செல்வோம்!’ - குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற அன்று தன்னுடைய ட்விட்டரில் இப்படி ட்விட்டினார் நரேந்திரமோடி. அந்த மாநிலத்துக்கு நான்காவது முறையாக முதல்வர் ஆனவர், 'முன்னேறிச் செல்வோம்’ என்று சொல்வது டெல்லியை நோக்கி. அடுத்து நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளராக மோடியை அறிவிப்பதைத் தவிர, அந்தக் கட்சிக்கு வேறு வழி இல்லை.

குஜராத், நாட்டின் மின் மிகை மாநிலமாக ஆகிவிட்டது. ஏற்கெனவே மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலத்தில் குட்காவுக்கும் தடை விதித்துவிட்டார்கள். சராசரித் தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலே நான்காவது இடம் குஜராத்துக்கு. இவை அனைத்தும் சேர்ந்துதான் மோடியை மீண்டும் மீண்டும் முதல்வர் ஆக்கிக்கொண்டு இருக்கிறது. அதற்காகக் குறைபாடுகளே இல்லாத மாநிலம் அல்ல குஜராத். ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகள் அங்கு அதிகம். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை சரியாகக் கவனிக்கவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்று புள்ளிவிபரங்களைப் போட்டு மோடியைக் குற்றம் சாட்டுபவர்களும் உண்டு. அனைத்தையும் தாண்டி அவர் வெற்றி பெறுவதற்குக் காரணம், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண டீக்கடைக்காரராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இறங்கி, பி.ஜே.பி-க்குள் நுழைந்து குஜராத் மாநில அரசியலில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, திடீர் முதல்வர் ஆனவர் மோடி. இத்தகைய வளர்ச்சிக்குப் பின்னாலும் பந்தா இல்லாமல் வலம் வந்தார். அதனால்தான் 2002-ம் ஆண்டு நடந்த கோரக் கொந்தளிப்புகளைக்கூட மறந்து, மன்னிக்க குஜராத் மக்கள் தயார் ஆனார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் அப்போது அனுபவித்த துன்ப துயரங்கள் யாராலும் மறக்க முடியாதவை. ஆனால், அதனைக்கூட தன்னுடைய செயல்பாட்டால் மாற்றிக் காட்டினார் மோடி. அதனால்தான் 'மரண வியாபாரி’ என்று சோனியா சொன்னதை குஜராத் மக்கள் ஏற்கவில்லை. இதேபோல் இந்திய மக்கள் முழுக்கவே ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று நம்பியே மோடி பிரதமர் வேட்பாளராக வரப்போகிறார்.

பி.ஜே.பி-யின் கோஷ்டிப் பூசலில் குளிர்காய்ந்த காங்கிரஸுக்கும் மோடி காய்ச்சல் அதிகமாகி வருகிறது. சமாளிப்பது கஷ்டம்தான்!

- முகுந்த்

கிராஃபிக்ஸ் : எம்.செய்யது முகம்மது ஆஸாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism