Published:Updated:

நல்லநாட்கள் வந்துவிட்டன: வதோதரா வெற்றி கூட்டத்தில் மோடி உரை!

Vikatan Correspondent
நல்லநாட்கள் வந்துவிட்டன: வதோதரா வெற்றி கூட்டத்தில் மோடி உரை!
நல்லநாட்கள் வந்துவிட்டன: வதோதரா வெற்றி கூட்டத்தில் மோடி உரை!
நல்லநாட்கள் வந்துவிட்டன: வதோதரா வெற்றி கூட்டத்தில் மோடி உரை!

வதோதரா: நாட்டு மக்களுக்கு நல்ல நாட்கள் வந்துவிட்டதாக வதோதராவில் நடைபெற்ற வெற்றி கூட்டத்தில் பேசிய பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதோடு, குஜராத் மாநிலம் வதோதராவில் போட்டியிட்ட மோடியும் சுமார் 5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 

இந்நிலையில், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு வதோதராவில் இன்று மாலை நடைபெற்ற வெற்றி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி," தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வதோதரா சகோதரர்கள் முன்தான் முதலில் உரையாற்ற வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன். உங்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்க வந்துள்ளேன்.

வதோதராவில் 50 நிமிடங்கள் தான் பிரசாரம் என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது. ஆனால், எனக்கு 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை அளித்துள்ளீர்கள். நீங்கள் எனக்கு அளித்து பொறுப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வாரணாசியில் என்னுடைய கருத்தை தெரிவிக்க முடியாவிட்டாலும் மக்கள் வெற்றியை தந்துள்ளனர்.
60 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வாக்குகள் அளித்து வதோதரா வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.

புதிய சாதனையை படைக்க காரணமாக இருந்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
தேர்தல் ஆணையமும், ஊடகங்களும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயக முறைகளை புரிந்து கொண்டதால் வதோதரா மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.
ஜனநாயகத்தின் வலிமையை உலகிற்கு வதோரா மக்கள் பறைசாற்றியுள்ளனர்.நான் ஏற்கனவே கூறியபடி, குஜராத் மக்கள் 26 எம்.பி.க்களை பா.ஜ.க.விற்கு அளித்துள்ளனர்.எனது வெற்றிக்கான பெருமை அனைத்தையும் மக்களையே சாரும்.குஜராத்தில் 60 சதவீத மக்கள் பா.ஜ.க.வுக்கு அளித்தார்கள் " என்றார்.