Published:Updated:

ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்பு!

விகடன் விமர்சனக்குழு
ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்பு!
ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்பு!
ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்பு!

புவனேஸ்வர்: ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று பதவி ஏற்க உள்ளார்.

ஒடிசா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பாரதிய ஜனதா 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், நான்காவது முறையாக ஒடிநசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்கவுள்ளார். இன்று காலை 10 மணியளவில் புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில், நவீன் பட்நாயக்கும் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன் பட்நாயக் அமைச்சரவையில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பதவியேற்பு விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆளுநர் மாளிகையருகே ஏராளமான மக்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பதவி ஏற்பு விழாவை காண பெரிய அளவிலான எல்.ஈ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.