தொலைக்காட்சி, எஃப்.எம்., திரையரங்குகள் எங்கெங்கும்

. ஒலிக்கிறது, 'அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ என்ற கடிதப் பாடல்! ஆனால், இதையே இன்னொரு கடிதம் விஞ்சிவிட்டது! 'திருப்பதிக்கே மொட்டை’ மாதிரி, கடிதங்கள் எழுதிக் குவிக்கும் கருணாநிதிக்கே ரத்தன் டாடா அனுப்பிய கடிதம்தான் அது!.
'திரு.ராசா தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராகப் பதவி ஏற்றதால், நியாயமான முடிவுகளை(?) எடுக்கக்கூடிய ஒரு தலைமை இத்துறைக்குக் கிடைத்து இருக்கிறது!’ என்று வலிய பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார் ரத்தன் டாடா. 'அவர் ஏன் ராசாவுக்கு லாலி பாடவேண்டும்?’ என்கிற

கேள்விக்கான விடை... அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கும் தேதிக்குள் ஒளிந்திருக்கிறது! அது நவம்பர் 13, 2007. அதாவது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் டாடா நிறுவனம் பலன் அடைந்ததாகச் சொல்லப்படும் காலகட்டம்!

டாடா நிறுவனம் டி.டி.ஹெச். சேவையைத் துவங்க இருந்த சமயத்தில், 'அதில் 33 சதவிகிதப் பங்குகளைக் கேட்டு தயாநிதி மாறன், ரத்தன் டாடாவை மிரட்டினார்’ என்று செய்திகள் வெளியான நிலையில்... அழகிரி விவகாரம் காரணமாக தயாநிதி மாறன் பதவி விலக... அந்த இடத்துக்கு ஆ.ராசா வந்தார். அப்படி அவர் பதவியேற்றது, மே 15, 2007.

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி சென்றதே டாடாவுக்கு டானிக்காக இருந்தது. அடுத்ததாக, 'நந்தி விலகியதோடு நடராஜரே தன் தாளத்துக்கு டான்ஸ் ஆடுவது மாதிரி’ ராசா தனது கம்பெனிக்கு ஆதரவாக இருந்தது, டாடாவுக்கு டானிக்கோ டானிக்! சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தொலைத்தொடர்பு சேவைகளை அளித்து வந்த டாடா கம்பெனிக்கு ராசாவின் துறை இந்தக் காலகட்டத்தில்தான் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் இயங்க வழிசெய்யும் உரிமத்தை வழங்கியது. இதை வாங்கிய கையோடு டாடா நிறுவனம், அந்த உரிமத்தில் 27 சதவிகிதத்தை டொக்கோமோ நிறுவனத்துக்குப் பெருத்த லாபத்தோடு கைமாற்றியது. அப்போது போட்டி கம்பெனிகள் எதிர்ப்புக் குரல் கொடுக்க... இதனால் ராசாவின் அதிகாரத்துக்கு தப்பித்தவறிகூட பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்ற கவலையில்தான், 'அளப்பரிய பணிகள் ஆற்றிவரும் ராசாவுக்கு நாமெல்லாம்

ஆதரவு அளிக்க வேண்டும்!’ என்று ராசாவை பாராட்டி, நீரா ராடியா மூலமாக கருணாநிதிக்கே கடிதம் அனுப்பினாராம் டாடா.

ரத்தன் டாடாவின் நம்பிக்கையைப் பெற்ற நீரா ராடியாதான் யூனிடெக் என்ற நிறுவனத்துக்கும் 'லாபி’ செய்தவர். சரம்சரமாக நீரா ராடியா ஒலிநாடாக்கள் வெளிவந்த சமயம், அவருக்கும் யூனிடெக் ரியல் எஸ்டேட் கம்பெனிக்கும் உள்ள நெருக்கம் வெட்ட வெளிச்சமானது! டாடா நிறுவனத்துக்கும் யூனிடெக்குக்கும் பலமான உறவு இருந்தது. அப்போது,

''22 சர்க்கிள்களில் செயல்பட உரிமம் பெற யூனிடெக்குக்குத் தேவைப்பட்ட மொத்த பணமான

1,700 கோடியையும் அந்த கம்பெனிக்கு கொடுத்ததே டாடா ரியாலிட்டி அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற டாடா நிறுவனம்தான்...'' என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ரத்தோடு சென்ற மாதம் 11-ம் தேதி பிரதமருக்கு கடிதமே எழுதியிருக்கிறார்.

உண்மைகள் இப்படி எல்லாம் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வரும் இந்த சமயத்தில்தான் கருணாநிதிக்கு ரத்தன் டாடா கடிதம் எழுதியதாக தகவல் கசிந்திருக்கிறது. 'எனக்கு டாடாவிடம் இருந்து கடிதமே வரவில்லை’ என்று கருணாநிதி பதில் அளித்துள்ளது எந்தளவுக்கு சரி என்பதை சி.பி.ஐ-யின் விசாரணைப் போக்குதான் முடிவு செய்ய வேண்டும்!

ரத்தன் டாடா எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் இதுதான்....

நவம்பர் 13, 2007, (பர்சனல் அண்ட் தனிப்பார்வைக்கு மட்டும்)

டியர் மிஸ்டர் சீஃப் மினிஸ்டர்,

கடந்த சில வாரங்களாகச் செய்திகளில் பலமாக அடிபட்டுவரும் தொலைத்தொடர்புத்

துறை பற்றி... இதே துறையைச் சேர்ந்தவர்களால் இன்னும் குறிப்பாகச் சொல்வது என்றால், சுயநலமிக்க சக்திகளால் மிகப் பெரிய சர்ச்சைக்குரியதாக உருவாக்கப்பட்டுவரும் துறை பற்றி.... நானாகவே உரிமை எடுத்துக்கொண்டு தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்!

திரு.ராசா இத்துறையின் அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து செயல்திறன் மற்றும் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளகூடிய அளவுக்கு நியாயமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு தலைமை இத்துறைக்குக் கிடைத்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விவகாரத்திலும்கூட அவருடைய பெரும்பாலான நிலைப்பாடு சட்டபூர்வமானதாகவும் தர்க்கரீதியாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது. இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் விவகாரத்தின் ஒரு பகுதி, ஒரே ஒரு அனுமதியை (அங்கீகாரத்தை) மையப்படுத்தி நீதிமன்றம் வரை போயிருக்கிறது. ஆனால், மற்ற எல்லா விவகாரங்களிலும் அவருடைய (ராசா) நிலைப்பாடு நியாயமானதாக இருக்கிறது. அதனால் இந்த விஷயத்தில் எல்லோரின் ஆதரவையும் பெற அவர் தகுதியானவர்.

நாட்டின் சரித்திரத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் தொலைத்தொடர்புத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது! இந்தத் துறைக்குத் தலைமையேற்கும் பொறுப்பு தங்கள் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. தாங்களும் தங்கள் அமைச்சரும் காட்டும் தொலைநோக்குப் பார்வைக்காகவும், எடுக்கும் முடிவுகளுக்காகவும், அதனால் இந்தத் துறை அடைகிற வளர்ச்சிக்காகவும் சரித்திரம் தங்களை நிச்சயம் புகழும்!

மகிழ்ச்சியில் உலகமே கூத்தாடக்கூடிய அளவுக்கு நம்முடைய தொலைத்தொடர்பு சந்தையின் அளவு பெரியதாக விளங்குகிறது. எல்லாம் நன்றாக நடக்குமேயானால்... தி.மு.க. தன் மிகப் பெரிய சாதனையாகவும்(?), நாட்டுக்கு அதன் பங்களிப்பாகவும்(?) தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியை உரிமையோடு குறிப்பிட வாய்ப்பு இருக்கிறது!

தொலைத்தொடர்புத் துறையின் இந்த வளர்ச்சி, நியாயமான மற்றும் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வழியில் வரவேண்டுமே ஒழிய, சுயநலமிக்க சக்திகளுக்கு என்றும் அடிபணிந்துவிடக் கூடாது.

சிறந்த நீதிமானாகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும் திகழும் தங்கள் மீது நான் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறேன். தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சி, தங்களுக்குமிகுந்த பாராட்டுதல்களை பெற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன். தங்கள் தலைமையின்கீழ் செயல்படும் திரு.ராசாவால் இதை சாத்தியப்படுத்த முடியும் என்றும் நம்புகிறேன்.

ஆகையினால் இந்தக் கடிதத்தைத் தங்களை நேரில் சந்தித்துக் கொடுக்கவும், 'ஸ்பெக்ட்ரம் யுத்தம், தொழில்நுட்ப யுத்தம் என்ற பெயரில் நாட்டின் வளர்ச்சியைத் தடம்புரள வைக்கவும், தேசத்துக்குக் கிடைக்கக்கூடிய லாபங்களைப் புறந்தள்ளவும், விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் சக்திகள் பற்றி நாட்டில் பொதுவாக எத்தகைய கருத்து நிலவுகிறது என்பதையும் தங்களுக்கு விளக்கவும் திருமிகு நீரா ராடியாவை நான் நேரடியாக அனுப்பி வைக்கிறேன்.

இந்தக் கடிதத்தை எந்த உணர்வோடு நான் எழுதினேனோ, அதே உணர்வோடு தாங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களின் உண்மையுள்ள,

ரத்தன்

- பி.ஆரோக்கியவேல்