Published:Updated:

ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக், சிக்கிம் முதல்வராக பவான் பதவியேற்பு!

விகடன் விமர்சனக்குழு
ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக், சிக்கிம் முதல்வராக பவான் பதவியேற்பு!
ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக், சிக்கிம் முதல்வராக பவான் பதவியேற்பு!
ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக், சிக்கிம் முதல்வராக பவான் பதவியேற்பு!

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வராக 4வது முறையாக நவீன் பட்நாயக்கும், சிக்கிம் மாநில முதல்வராக 5வது முறையாக பவான் சம்லிங்கும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஒடிசா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பாரதிய ஜனதா 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், நான்காவது முறையாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று காலை பதவியேற்றர். புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், நவீன் பட்நாயக்குடன் அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஜமீர்.

பதவியேற்பு விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த பதவி ஏற்பு விழாவை பொதுமக்கள் காணும் வகையில் பெரிய அளவிலான எல்.ஈ.டி. திரைகள் வைக்கப்பட்டிருந்தது.

சிக்கிம் மாநில முதல்வராக பவான் சம்லிங் பதவியேற்பு

சிக்கிம் மாநில முதல்வராக 5வது முறையாக பவான் சம்லிங் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மற்றும் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் சீனிவாஸ் பட்டீல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.