Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

கழுகார் பதில்கள்

அரசியலில் நம்பர் 2 என்பதற்குப் பொருத்தமானவர் நாவலர் நெடுஞ்செழியனா... பேராசிரியர் அன்பழகனா... ஓ.பன்னீர் செல்வமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்பர் 1-ன் நிழலைப் பார்த்து நடுங்கு பவர்தான், நம்பர் 2-வுக்குப் பொருத்தமாக இருக்க முடியும். பேராசிரியர் அன்பழகன், கருணாநிதிக்கு எதிராகச் சிந்திப்பார். ஆனால், யாரிடமும்சொல்ல மாட்டார். கருணாநிதியை மதிப்பார். ஆனால், நடுங்குவது​போல் நடிக்க மாட்டார்.

கழுகார் பதில்கள்

நாவலர் நெடுஞ்செழியனைப் பொறுத்தவரை, அவரது கிண்டல்களே அவருக்கு எதிராக அமைந்து விடும். ஒருமுறை, பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க ஜெயலலிதா வருவதாக இருந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் நெடுஞ்செழியன், க.ராஜாராம், கி.வீரமணி ஆகியோர் வெயிலில் காத்திருந்தனர். ஜெயலலிதா எத்தனை மணிக்கு வருவார் என்பதே தெரியாமல் நின்று கொண்டு இருந்தனர். 'நாமதான் வெயில்ல காயுறோம்னா... இந்த ஆளு ஏன்யா கங்காரு மாதிரி கையைக் கட்டிக்கிட்டு நிற்கிறார்’ என்று வீரமணியை சுட்டிக்காட்டி நாவலர் கிண்டல் அடிக்க... அது, ஜெயலலிதா வரைக்கும் பஞ்சா யத்துக்குப் போனது.

இத்தகைய எந்த குணாம்சமும் இல்லாத 'சொக்கத் தங்கம்’ ஓ.பன்னீர்.

 ஆர்.பி.ப்ரியன், மழையூர்.

கழுகார் பதில்கள்

'ஜூன் மாதத்துக்குப் பிறகு, வானத்தில்தான் இருள் இருக்கும். தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருக்கவே இருக்காது’ என்று மின் துறை அமைச்சர் அறிக்கை விட்டுள்ளாரே?

  எந்த ஜூன் என்று அமைச்சர் சொல்ல வில்லையே?

##~##

வானத்தை வளைப்போம், வைகுண்டம் காட் டுவோம் என்பது மாதிரியான பேச்சுக்களை விடுத்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இனியாவது நத்தம் விஸ்வநாதன் ஈடுபட வேண்டும். ஜூன் மாதத்துக்குப் பிறகும் மின் பற்றாக்குறை இருந்தால், அவர் அமைச்சர் பதவி யைத் துறப்பாரா?

 எஸ்.தாஜுதீன், திருக்காட்டுப்பள்ளி.

கழுகார் பதில்கள்

'இந்தியர்களில் 90 சதவிகிதம் பேர் முட்டாள்கள்’ என்று, ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளாரே?

பிரஸ் கவுன்சில் தலைவராக ஆனதில் இருந்து மார்க்கண்​டேய கட்ஜு ஆக்கபூர்வமான விமர்சனங்​களையும், அறிவுபூர்வமான கருத்துக்​களையும் வெளிப்படையாகச் சொல்லி வருவது வரவேற்​கத்தக்கது.

ஆனால், இந்தியர்களில் 90 சதவிகிதம் பேர் முட்டாள்கள், அரசியல்வாதிகளில் ஒருவர்கூட நல்லவர் இல்லை என்பது போன்ற பொத்தாம் பொதுவான கருத்துக்களை அவர் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், திக்விஜய சிங் போன்றவர்களுக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

 எம்.கிருஷ்ணன், சேலம் - 6.

கழுகார் பதில்கள்

கருணாநிதி கட்டிய சட்டசபைக் கட்டடத்துக்கு மாற்று வழியே இல்லையா?

கருணாநிதி கட்டியதோ, ஜெயலலிதா கட்டியதோ... செலவழிக்கப்பட்டது அரசாங்கப் பணம், அதாவது மக்களின் பணம். எனவே, அதை இப்படி வீணாய்ப் போடுவது, மக்கள் பணத்தை விரயமாக்குவதற்குச் சமம். ஒரு மருத்துவமனை அமைப்பதற்கான உள்கட்ட​மைப்பு வசதி​கொண்ட கட்டடம் அல்ல அது. எனவே, அரசு அலுவலகங்களை அதில் அமைக்கலாம். அப்படிச் செய்வது, ஜெயலலிதாவுக்கு நல்ல பெயரைத்தான் ஏற்படுத்தும். பெருந்தன்மைக்கு உதாரணமாகக்கூட அதைச் சொல்லிக்​கொள் ளலாம். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும்பாதையில்.. கோடிக்கணக்கான பணம் செலவழித்து எழுப்பப்பட்ட கட்டடத்தை சும்மா போட்டு​ வைத்திருப்பது முதல்வருக்குப் பெருமை சேர்க்​காது.

 எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

கழுகார் பதில்கள்

'பி.ஜே.பி. கூட்டணிக்கு வந்தால் சரத்பவார் பிரதமர் ஆகலாம்’ என்கிறாரே சிவசேனா தலைவர் மனோகர் ஜோஷி?

இது, சரத்பவாருக்குப் போடப்படும் தூண்டில். பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்தாலும் பிரதமராக முடியாது என்பது சரத்பவாருக்குத் தெரியாதா? அப்படி ஒரு சூழ்நிலை சரத்பவாருக்கு இரண்டு கூட்டணியிலும் இல்லை.

மேலும் மோடி மீது சிவசேனை காட்டும் வெறுப்பின் வெளிப்பாடு இது.

 சு.சண்முகப்பாண்டியன், மணல்குண்டு.

கழுகார் பதில்கள்

அரசியல் கட்சிகள் நாட்டுக்குத் தேவையா?

'ஒரு சிலரின் ஆதாயத்துக்காகப் பலருக்குப் பிடிக்கும் பைத்தியமே கட்சி’​என்கிறார் அலெக்சாண்டர் போப். அதனால், கஷ்டங்கள் நாளுக்கு நாள் அதிகமாவது உண்மைதான். ஆனால், ஒரு சில நன்மைகளுக்காக கட்சிகளை அனைவரும் சகித்துக்கொள்ளப் பழகி விட்டனர்.

 ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர்களில் தொண்டர் செல்வாக்கு உள்ளவர் யார்?

ஓரளவுக்கு ஜி.கே.வாசனைச் சொல்​லலாம்.

 ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

கழுகார் பதில்கள்

'துரை தயாநிதி தவறு எதுவும் செய்ய வில்லை. இது, ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு’ என்கிறாரே மு.க.அழகிரி?

ஒலிம்பஸ் என்ற நிறுவனம் கிரா னைட் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளது. அதில்

கழுகார் பதில்கள்

துரை தயாநிதியும் நாகராஜன் என்பவரும் இயக்குனர்களாக இருந்​துள்ளனர். இருவரும் பின்னர் விலகி விட்டதாகச் சொல்​​கிறார்கள். அப்படியானால் அந்த  நிறுவனம் யாருடையது? கல்எடுத்தது யார்? விற்றது யார்? லாபம் யாருக்குப் போ​னது? இதுதான் புரியாத புதிர்.

முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன், பட்டப்பகலில் மதுரை வீதியில் வெட்டிக் கொல்லப்​​பட்டார். சிலர் கைது​ செய்யப்​பட்டனர். பிறகு அவர்கள், குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். அப்படி​யானால் தா.கி-யைக் கொன்ற குற்றவாளி யார்? தூண்டியது யார்? இதுவும் புரியாத புதிர்!

இத்தகைய ஏராளமான புதிர்​களோடுதான் சுற்றிக்கொண்டு இருக்கிறது பூமி.

 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்

2012-ல் மிகச்சிறந்த காமெடி?

'ஊழலுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் ’ என்று மன்மோகனும் சோனியாவும் சொன்னதுதான்.

 சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்

திருநாவுக்கரசர் இப்போது எங்கு இருக்கிறார்... எப்படி இருக்கிறார்?

காங்கிரஸில்தான் இருக்கிறார். இத்தனை தாவல்கள் அரசியலுக்கு ஆகாது என்பதை இப்போதாவது உணர்ந்தாரா எனத் தெரிய​வில்லை.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்