Published:Updated:

''வேட்டி கட்டிய தமிழனா அல்லது சேலை கட்டிய தமிழரா?''

கருணாநிதியின்

''வேட்டி கட்டிய தமிழனா அல்லது சேலை கட்டிய தமிழரா?''

கருணாநிதியின்

Published:Updated:
##~##

ரசியல், இலக்கிய, திரைப்​பட விழாவாக நடந்து முடிந்திருக்கிறது, 'ப.சிதம்பரம் ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா! 

மத்திய அமைச்சர் ப.சிதம்​பரம் குறித்துப்பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்துக்​களை கடந்த ஓர் ஆண்டாகத் தொகுத்து புத்தகம் ஆக்கி இருக்கிறார் இலக்கியா நடராஜன். கடந்த 29-ம் தேதி, பிரபலங்​கள் புடைசூழ... காமராஜர் அரங்கத்தில் தடபுடலாக அரங்கேறியது புத்தக வெளி​யீட்டு விழா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

நடிகர் கமல் பேசியபோது, ''இங்கு நான் கடமைக்காக வரவில்லை. கடன்பட்டவனாக வந்துள்ளேன். எனது தாய் இறந்தபோது இவரின் மனைவி, 'உனது தாய் உன்னை விட்டுப் போகவில்லை. (சிதம்பரத்தின் தாயாரைப் பார்த்து) பக்கத்து வீட்டுக்கு வந்து விட்டார். இனி, எங்கள் வீட்டுக்கு வந்துவிடு’ என்று கூறினார்கள். தாய் வீட்டுக்கு நான் கடன்பட்டுள்ளேன். வேட்டி கட்டிய தமிழராக டெல்லியில் வலம்வரும் சிதம்பரம் விரைவில் பிரதமராக வேண்டும்'' என்றார் அதிரடியாக.

''வேட்டி கட்டிய தமிழனா அல்லது சேலை கட்டிய தமிழரா?''

பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மைக் பிடித்தார் ரஜினி. ''சிதம்பரம் அவர்களுடன் எனக்கு 1996-ம் ஆண்டு நட்பு தொடங்கியது. அப்போது, அரசியல் ஞானிகளாகத் திகழ்ந்த மூப்பனார், கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான சினேகம் ஏற்பட்டது. 1996-ல் த.மா.கா-வை மூப்பனார் உருவாக்கினார். அந்த சமயத்தில் தமிழகத்தின் நிலைமையை எனக்கு உணர வைத்தவர் துக்ளக் சோ.

சில ஆண்டுகளுக்கு முன், டெல்லியில் ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிதம்பரத்தை அழைக்கச் சென்றபோது, ரஜினி வந்தால்தான் நான் வருவேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். எனக்காக ப.சிதம்பரமும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எனக்காக அவர் வந்ததை நினைத்துப் பெருமைப்பட்டேன். அவருக்கு ஏழைகளைப் பணக்காரர்கள் ஆக்கவும் தெரியும்; பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கக் கூடாது என்றும் தெரியும்; பணக்காரர்களை ஏழைகள் ஆக்கவும் தெரியும். நடுத்தர மக்களை மேலும் உயர்த்தவும் நன்கு தெரியும். அதனால்தான் மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகள் இவருக்குக் கிடைக்கின்றன.

பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மூன்று வட்டங்கள் வைத்து இருப்பார்கள். முதல் வட்டம் அவர்களின் தனித்துவமானது. இரண்டாவது வட்டத்​துக்குள் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என ரத்தம் சம்பந்தபட்ட பந்தங்கள் இருக்கும். மூன்றாவது வட்டத்தில் நண்பர்கள், நெறியாளர்கள் இருப் பார்கள். இரண்டாம் வட்டத்துக்குள் சொல்லக் கூடாத விஷயங்களை எல்லாம் மூன்றாம் வட் டத்தினரிடம் சொல்லி, தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். டெல்லியில் யார் பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களின் மூன்றாம் வட்டத்தில் இருப்பவர் ப.சிதம்பரம். அவருக்குத் தெரியாமல் அங்கு எதுவும் நடந்து விடாது. அரசியல் ரகசியமாக இருந்தாலும் அது சிதம்பர ரகசியத்துக்குள் அடங்கும்.'' என்று சொல்லிக்கொண்டே வந்த ரஜினி,

''வேட்டி கட்டிய தமிழனா அல்லது சேலை கட்டிய தமிழரா?''

''என்னுடன் பேசும்போது நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிதம்பரம் கேட்டார். அவருக்குத் தெரியும்... அப்படி நான் வந்தால், என் வழி.. தனி வழியாக இருக்கும்'' என்று மர்மப் புன்னகையுடன் முடித்தார். (மறுபடியும் முதல்ல இருந்தா?)

நிறைவாகப் பேசிய கருணாநிதி, ''சிதம்பரம் 1984-ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக்காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்!'' என்று பஞ்ச் வைத்தார். 'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று அ.தி.மு.க-வினர் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.

பார்வையாளராக மட்டுமே கடைசி வரை இருந்தார் ப.சிதம்பரம். இப்படி ஒரு புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தது கார்த்தி சிதம்பரமாம். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி!

- தி.கோபிவிஜய்

படங்கள்: வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார்

 கருணாநிதியா... கவர்னரா?

முதலில் இந்தப் புத்தகத்தை கருணாநிதி வெளியிட, கவர்னர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்பினாராம் ப.சி. அதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, 'கவர்னர் வந்தால், நான் அந்த மேடையில் ஏறமாட்டேன்’ என்று பகீர் கிளப்பினாராம் கருணாநிதி. இறுதியில் கருணாநிதியே முக்கியம் என்று முடிவெடுத்தாராம் சிதம்பரம்.

 ஸ்ரீநிதி சீக்ரெட்!

விழாவில் சிதம்பரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகி இருக்க, மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி மட்டும் மிஸ்ஸிங். அடுத்த சில நிமிடங் களில் நாரத கான சபாவில் அவருடைய நடன நிகழ்ச்சி அரங்கேற இருந்ததுதான் ஆப்சென்ட்டுக்கு காரணம். புத்தக விழாவை முடித்த சூட்டோடு, மருமகளின் நாட்டி யத்தைக் காண்பதற்கு நாரத கான சபாவுக்கு விரைந்தார் பொருளாதாரப் புலி!