Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்குப் போன ஜெயலலிதா, அவரது வெற்றி ரகசியங்களைக் கேட் டறிந்து செயல்படுத்தலாமே?

கழுகார் பதில்கள்!

மூன்று முறை முதல்வர் ஆவது பெரிதல்ல. தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஆனதுதான் மோடியின் சாதனை. 'வெறும் வாய்வார்த்தை வேலை செய்யாது. நீங்கள் மக்களுக்காகப் பணியாற்றுகிறீர்கள் என்பதை அவர்கள் நம்ப வேண்டும்’ என்கிறார் மோடி. அந்த நம்பிக்கையே வெற்றிக்கு முதல் காரணம். 20 அம்சத் திட்ட அமலாக்கத்தில் குஜராத் நம்பர் ஒன் மாநிலம். 'வெறுப்பு அரசியலை விட்டொழியுங்கள். வளர்ச்சி அரசியலைக் கையில் எடுங்கள்’ என்று களம் இறங்கினார். அரசுத் திட்டங்களில் இடைத்தரகர்களை நீக்கி நேரடியாகப் பணப்பயன்பாடு சென்றடைய மேளாக்கள் நடத்தினார். இத்தகைய மேளாக்கள் கிராமப்புற மக்களையும் ஈர்த்தது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார். நல்லது செய்பவர்களுக்கு சாதி, மதம் ஒரு பொருட்​டல்ல என்று, 'மன்னித்து’ இஸ்லாமிய வாக்காளர்களும் ஓட்டுப் போட்டனர்.  அனைத்துக்கும் மேலாக, தொடர்ந்து முதல் வராக இருக்கும் அவரின் சொத்துக் கணக்கு 1.33 கோடி ரூபாய்தான்!

வி.பரமசிவம், சென்னை-25.

கழுகார் பதில்கள்!

தமிழக முதல்வரைச் சந்தித்த தா.பாண்டியன், டெல்டா மாவட்டத்தில் ஒன்பது விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியதற்கு, 'இரண்டு விவசாயிகள் மட்டுமே உயிர் இழந்ததாக அரசு அதிகாரிகள் சொன்​னார்களே...’ என்று பதில் அளித்தாராமே?

மனித உயிர்களை அரசு அதிகாரிகள் எவ் வளவு மலிவாக நினைக்கிறார்கள் என்ப​தற்கு உதாரணம் இது. அதன் பிறகாவது தனக்குத் தவறான தகவல் தந்த அதிகாரிகளை முதல்வர் கண்டித்தாரா?

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்!

'பாரதிய ஜனதாவின் மதவாதம் தெளிவாகத் தெரிந்த காரணத்தால்தான், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் தி.மு.க. செயல் படுகிறது’ என்கிறாரே கருணாநிதி?

1999-ல் பாரதிய ஜனதாவை ஆதரிக்கும்போது அது தெரியவில்லையா? 2004 வரை ஆட்சி சுகம் அனுபவிக்கும்போது தெரியவில்லையா?

1998 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி. கூட்டணி அமைத்த நேரத்தில், 'பிளேக் பரவுகிறது’ என்று சொன்னவர் கருணாநிதி. அடுத்த ஓர் ஆண்டில் அவர்களுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டார். மூத்த அரசியல் வாதியான சி.சுப்பிரமணியம், 'கருணாநிதி இருக்கும் இடத்தில் மதவாதம் தலைதூக்காது’ என்று ஒரு வார்த்தை சொன்னதை வைத்து, அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி, பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளுக்குத் திரை போட்டு வந்தவர்தான் கருணாநிதி. அடுத்து, பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் அளவுக்கு வலிமை​யை அடையுமானால்.... அன்று கரு ணாநிதி என்ன பேசுவார் என்பது அனை​வரும் அறிந்த​துதான்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

கழுகார் பதில்கள்!

குஜராத் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தன்​னோடு கடுமையாக மோதிய கேசுபாய் படேலை, தேர்தல் முடிந்ததும் நரேந்திர மோடி நேரில் சென்று பார்த்தி ருக்கிறாரே?

அத்தகைய சூழ்நிலை இங்கு இல்லாதது தமிழகத்தின் துரதிர்ஷ்டம்தான். கருணாநிதி முதல்முறை முதல்வர் ஆனபோதுகூட எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸின் முக் கியத் தலைவர்களான காமராஜர், பக்த​​வத்சலம் ஆகியோர் இல்லம் தேடிச் சென்று பார்த்திருக்கிறார். அடுத்​தடுத்த காலங்களில்தான் பண்பாடு பட்டுப்​போய் விட்டது.

இரா.மனக்காவலன், சென்னை-83.

கழுகார் பதில்கள்!

காவிரியில் தண்ணீர்?

அது இனி விவசாயிகளின் கண்ணீராக மட்டுமே முடிந்து போகும் போல் தெரிகிறது. ஏதோ கடன் கேட்கப் போனவர் போலப் போய், அவர்கள் 'இல்லை’ என்றதும் படாரெனத் திரும்பி வந்து விடுகிறார் தமிழ்நாட்டு முதல மைச்சர். கர்நாடகாவையும் தமிழகத்தையும் சேர்த்து ஆட்சிபுரியும் மத்திய அரசாங்கத்துக்கு காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனை புரியவில்லை. புரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. தஞ்சை மண்ணில் பிறந்து இன்று மத்திய அரசாங்கத்தை இயக்கிக்கொண்டு இருக்கும் தகுதியை அடைந்துள்ள கருணாநிதியும் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இப்படி மூன்று பக்கமும் இடி இறங்குவதால் 'சோறுடைத்த’ சோழநாடு, சோர்வடைந்து விட்டது. இது இன்னும் இரண்டு ஆண்டுகள்  தொட ருமானால் தமிழகம் அரிசிப் பஞ்சத்தை நோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளது.!

க.கலைச்செல்வன், காயரம்பேடு.

கழுகார் பதில்கள்!

எந்தச் சட்டம் தன் கடமையைச் செவ்வனே செய்து முடித்து இருக்கிறது?

பழிவாங்கப் பயன்படுத்தும்போது, எல்லாச் சட்டங்களும் கடமையைச் செவ்வனே செய்கின்றன. அதனால்​தான், 'எந்தவொரு சட்டத்தின் தன் மையும் அதைப் பயன்படுத்து​பவரின் மனதைப் பொறுத்தது’ என்றார் அம் பேத்கர்.

ஆம்பூரணி ச.நாராயணன், பாளையங்கோட்டை.

கழுகார் பதில்கள்!

பாலியல் கொடுமை உட்பட பெரும்பாலான வன்முறைகளுக்கு குடிபோதைதானே அடிப் படையாக இருக்கிறது?

ஆம். மது மயக்கம் என்பதன் முழு மையான அர்த்தமே மதி மயக்கம்தான். குற்றவியல் நடைமுறைச் சட்டத்​தில் கூட தப்பித்தல் என்ற வார்த்தை இருக்கிறது. குற்றவாளி மனநிலை பிறழ்ந்தவர் என நிரூபிக்கப்பட்டால் தண்டனை குறையும் என்பதே அது. 'தொடர்ச்சியான குடி... அதனால் மனநிலை

கழுகார் பதில்கள்!

பாதிக்கப்பட்டவராக இருந்தார்’ என்று சொல்லி வாதிடும் நிலை உண்டு. எனவே, மனநிலை பாதிப்புகள் வேறு, ஆல்கஹாலிக் தன்மைகள் வேறு என்பதைப் பிரித்தாக வேண்டும். குடியின் காரணத்தை வைத்து இந்த சட்டப்பிரிவின் மூலமாக தப்பித்து விடாமல் கவனமாகப் பார்க்க வேண்டும்.

ஜி.கண்ணன், பெருங்களத்தூர்.

கழுகார் பதில்கள்!

ராஜீவ் இறக்கும்போது பிரதமராக இருந்தாரா?

இல்லை. அன்று காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி இருந்தது. 'ராஜீவ் வீட்டை இரண்டு பேர் உளவு பார்த்தனர்’ என்று சொல்லி ஆதரவை வாபஸ் வாங்கினர். அதனால், தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டது. புதிய பிரதமர் வரும்வரை காபந்து அந்தஸ்தில் சந்திரசேகர் தொடர்ந்தார்.

சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

கழுகார் பதில்கள்!

சோனியா சாதனைப் பெண்மணிதானே?

எதில்? இங்கிலாந்துக்காரர்களால் செய்ய முடியாததை இத்தாலியில் இருந்து வந்து செய்ததைச் சொல்கிறீர்களா?

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism