Published:Updated:

மிஸ்டர் கழுகு: புத்தாண்டு... ரீ என்ட்ரி

மிஸ்டர் கழுகு: புத்தாண்டு... ரீ என்ட்ரி

மிஸ்டர் கழுகு: புத்தாண்டு... ரீ என்ட்ரி

மிஸ்டர் கழுகு: புத்தாண்டு... ரீ என்ட்ரி

Published:Updated:
மிஸ்டர் கழுகு:  புத்தாண்டு... ரீ என்ட்ரி

ழுகார் உள்ளே நுழைந்ததும், ''புத்தாண்டு தினம் எப்படி?'' என்றோம், ''ரீ என்ட்ரிதான் நடந்து ​விட் டதே!'' என்று மேட்டரை ஆரம்பித்தார். 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடந்த புத்தாண்டு தினத்தன்று சசிகலா அண்ட் கோ-வினர் கட்சியை விட்டும் கார்டனை விட்டும் நீக்கப்பட்டு இருந்ததால், 2012 தொடக்கம் அவர்களுக்கு கறுப்புப் புத்தாண்டாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று சசிகலா, இளவரசி ஆகியோருடன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயி லுக்கு ஜெயலலிதா போனதால், இந்தப் புத்தாண்டு சிறப்பாகவே விடிந்ததில் சசிகலா வட்டாரத்தில் மகிழ்ச்சி. 'இனிமே எனக்கு எதுக்கு அரசியல்? அக்கா வீட்டில் மூலையில் ஒரு இடம் கிடைத்தால் போதும்’ என்று, இதுவரை சொல்லிவந்த சசிகலாவின் நடமாட் டம் ஜெயா டி.வி. அலுவலகம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் பக்கம் தென்படுகிறது.''

''அப்படியா?''

''ம்! திடீர் விசிட்டுகளாக வலம் வருகிறார் சசிகலா. ஊழியர்களிடம் சகஜமாகப் பேசுகிறார்.  மறுபடியும்  'சின்னம்மா... சின்னம்மா’ என்று பாசக் குரல்கள் கேட்பதால், மந்திரிகளும் மாவட்டச் செய​லாளர்களும் உள்காய்ச்சலில் திரி கிறார்கள். 2013-ம் ஆண்டு மந்திரிகளுக்கு எப் படி இருக்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது'' என்று சிரித்த கழுகார்...

மிஸ்டர் கழுகு:  புத்தாண்டு... ரீ என்ட்ரி

''தனித்துப் போட்டி என்ற ஜெய​லலிதாவின் அறிவிப்பு அனைத்துக் கட்சி களையும் தீராக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. 'ஒரு வருடம் கழித்துச் சொல்ல வேண்டியதை இப்போதே எதற்காக ஜெயலலிதா சொன்னார்?’ என்று தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். 'நாடாளு​மன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரப்போகிறது’ என்று ஜெயலலிதாவிடம் மோடி சொன்னதாகவும் அதனால்தான் அவர் இப்படி அறிவித்ததாகவும் சொல் கிறார்கள்.''

''காங்கிரஸோடு நெருக்கம் காட்ட ஜெயலலிதா நினைத்ததாக முதலில் சொன்னார்களே?’

''பிரணாப் முகர்ஜியுடன் மேடையில் பங்கேற்ற​தை வைத்து அப்படிச் சொல்லி இருப்பார்கள். 'காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க-வைத் தனிமைப்படுத்த முடியும்’ என்றுகூட ஆரம்பத்தில் நினைத்தார். ஆனால், அது சாத்தியம் இல்லை என்பதை டெல்லித் தகவல்கள் சொன்னது. 'முன்பைவிட இப்போது தி.மு.க-வை காங்கிரஸ் அதிகம் நம்புகிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக தி.மு.க. எடுத்த நடவடிக்கையைப் பெரிய விஷயமாக சோனியா நினைக்கிறார்’ என்றும் தகவல். அதனால்தான் காங்கிரஸ் பக்கமாக இருந்த பார்வையை அவர் திருப்பினாராம். காங்கிரஸ் மீது இன்னொரு பலமான அதிருப்தியும் அவருக்கு இருந்தது.''

''அது என்ன?''

''தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியின் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க நினைத்தார் ஜெயலலிதா. ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உண்டு. அந்த வகையில் சாரங்கிக்காக ஃபைல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால்தான் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மறைமுகமாகத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்ததாக டெல்லியில் பேச்சு.''

''இப்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நிலைமையே பரிதாபமாக இருக்கிறதே?''

''காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய கட்சி​களுடன் கூட்டணி இல்லை என்றால், கம்யூனிஸ்ட்கள் வந்து சேர்ந்து​ கொள்வார்கள். தேசிய அளவில் அமையும் மூன்றாவது அணியில்கூட ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம். 'கம்யூனிஸ்ட்கள் எங்கள் கட்சியை ஆதரிக்கலாம். ஆனால், நாடாளுமன்றத் தொகுதி கிடையாது. சட்ட​மன்றத்தில் உங்களுக்குத் தேவையான இடங்களை நாங்கள் கொடுத்து விட்டோம். நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்தால், அடுத்து நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதற்கான உரிய மரியாதையை காட்டு வோம்’ என்பதே ஜெயலலிதாவின் பதிலாக இருக்குமாம். இன்றைய நிலையில் அ.தி.மு.க. கூட் டணிக்கான முயற்சியில் வேறு எந்தக் கட்சியும் இறங்கவில்லை என்பதே உண்மை. பா.ம.க. தனித்து போட்டியிடுவதாகச் சொல்லி வருகிறது. நாஞ்சில் சம்பத்தைச் சேர்த்ததன் மூலமாக ம.தி.மு.க-வையும் ஜெயலலிதா உதாசீனப்படுத்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உதிரிகளைச் சேர்த்தாலும் அவர்களுக்குத் தொகுதிகள் தரவேண்டியது இல்லை என்பதே ஜெய லலிதாவின் எண்ணவோட்டம்.''

''முதல்வர் கொடநாடு சென்று விட்டாரே?''

''குடியரசு தினம் வரை அங்கே இருந்து அரசுப் பணிகளைக் கவனிப்பார் என்கிறார்கள். இடை​யில் 10, 11 தேதிகளில் வந்து போகலாம் என்றும் ஒரு பேச்சு. அமாவாசை நாள் என்பதால் மந்திரி சபை மாற்றம் ஏதாவது இருக்கலாமோ என்றும் மந்திரிகள் கலங்கிக் கிடக்கிறார்கள்!''

''மந்திரிகள் கலங்காமல் இருந்தால்தான் நியூஸ்!''

மிஸ்டர் கழுகு:  புத்தாண்டு... ரீ என்ட்ரி

''திடீர் தீக்குச்சிகளை கொளுத்திப் போடுவதில் கருணாநிதி சமர்த்தர். பா.ம.க-வில் இருந்து விலகிய வேலூர் மாவட்டத்துக்காரர்கள் சிலர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க-வில் சேர வந்தனர். அறிவாலயத்தில் இதற்கான மினி விழா நடந்தது. 'ராமதாஸின் நடவடிக்கைகள் பற்றி நான் எந்தக் கருத்தும் சொல்வது இல்லை. ஆனால், அவர்தான் என்னை அவதூறாகப் பேசி வருகிறார்’ என்று அந்தக் கூட்டத்தில் வருத்தப்பட்ட கருணாநிதி, 'தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக என் ஆயுள் இருக்கும் வரை பாடுபடுவேன். அதன்பிறகு என்று கேள்வி எழுந்தால், எனக்குப் பக்கத்தில் இருக் கிற ஸ்டாலின் அடுத்துப் பாடுபடுவார்’ என்று சொன்னாராம். பலத்த கைதட்டலைக் கிளப்பி இருக்கிறது அந்தப் பேச்சு. 'ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்’ என்று கருணாநிதி அறிவித்து விட் டார் என்று பரபரப்பு கிளம்பியது. 'என் ஆயுள் இருக்கும்வரை நான்தான் தலைவர் என்று தலைவர் சொல்லி விட்டார். அதனால், உடனடியாக யாருக்கும் விட்டுத்தர மாட்டார்’ என்று ஸ்டாலின் எதிர்ப்​பாளர்களும், 'தலைவர்,தனக்கு அடுத்து ஸ்டாலின்தான் என்பதைச் சொல்லி விட்டாரே’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்களும்பட்டி​மன்றம் வைக்காத குறையாகவிவாதிக்க ஆரம்பித்து​விட்டனர்.''

'' உண்மை என்ன?''

''ஸ்டாலினுக்கு பதவியைக் கொடுக்கவும் நினைக்கிறார், அவரால் கொடுக்கவும் முடியவில்லை... இதுதான் கருணா​நிதியின் உண்மையான மனநிலை. அதேநேரத்தில், ஸ்டா​லினைச் சமாதானப்படுத்தி தன் பக்கத்தி​லேயே வைத்துக்கொள்ள நினைக்கிறார். அதற்காகவே இம்மாதிரி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஏதாவது வார்த்தை தூபம் போடுவது கருணாநிதியின் வழக்கமாகி விட்டது என்பதை தி.மு.க. முன்னணியினர் உணராமல் இல்லை.''

''அப்புறம்?''

''புத்தாண்டு அன்று புதுச்சேரி முதல்வர் நிலை மையைச் சொல்கிறேன் கேளும்... சாதாரணத் திருவிழா என்றாலே புதுச்சேரியில் தேரும் திருவிழாவுமாக இருக்கும். காதுகுத்துக்குக்கூட கட்அவுட் வைத்துக் கொண்டாடும் ஊர் அது. ஆனால், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல்வர் ரங்கசாமியைப் பார்க்க பெரிய அளவில் யாரும் வரவில்லையாம். 'பெரிய சட்டை போட்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தார் ரங்கசாமி. வாழ்த்து வாங்க யாரும் வரவில்லை. தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளார். சில போலீஸ் அதிகாரிகள் மட்டுமே வந்தனர். எந்த ஆண்டும் கூட்டம் கட்டி ஏறும். ஆனால், இப்போது யாரும் வரவில்லை. அந்த அளவுக்கு அதிருப்தி’ என்கிறார்கள். 'காங்கிரஸுக்கு எதிரான அலையில்தான் ரங்கசாமி வென்றார். ஆனால் இப்போது, காங்கிரஸுடன் அதிக நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டார்’ என்றும் சொல்கிறார்கள். ஆசி வாங்குவதற்கு ஆட்கள் வராததால் மதியத்துக்குப் பிறகு, சேலத்தில் உள்ள தனது ஆஸ்தான அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்குக் கிளம்பி விட்டாராம். இந்த ஆண்டிலாவது ரங்கசாமி நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கிறதா என்று பார்ப்போம்!'' என்ற கழுகார் சில துணுக்குத் தகவல்களைக் கொட்டிவிட்டுப் பறந்தார்!

அவை...

மிஸ்டர் கழுகு:  புத்தாண்டு... ரீ என்ட்ரி

கடந்த முறை, முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவருக்கு தங்கத்தாரகை விருது வழங்க ஏற்பாடு செய்தவர் பிஷப் எம்.பிரகாஷ். அப்போது அது சர்ச்சைக்குரிய  

மிஸ்டர் கழுகு:  புத்தாண்டு... ரீ என்ட்ரி

விஷய​மாக பேசப்பட்டது. அதன்பிறகு, மாநில சிறுபான்மையினர் கமிஷனின் சேர்மனாக நியமிக்கப்​பட்டார் எம்.பிரகாஷ். ஒன்றரை வருட காலம் மட்டுமே பதவியில் இருந்தார். இந்த நிலையில், கடந்த 31-ம் தேதியன்று திடீரென்று அவருக்கு அழைப்பு. சிறுபான்மையினர் கமிஷன் சேர்மன் பதவியை புத்தாண்டுப் பரிசாக வழங்கி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

மிஸ்டர் கழுகு:  புத்தாண்டு... ரீ என்ட்ரி

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு கவர்னர் பதவி தேடி வரலாம். குமரிஅனந்தன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் தங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஆதரவாளர்களிடம் ஜோசியம் கேட் கிறார்களாம்.

மிஸ்டர் கழுகு:  புத்தாண்டு... ரீ என்ட்ரி

ஆளும் கட்சித் தலைமை அலுவலகத்தில் மெகா பதவியில் இருப்பவர் சமீபத்தில் அரேபிய நாட்டுக்கு குடும்பத்துடன் டூர் போகத் திட்டமிட்டார். 'ஃப்ளைட் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொல்லியே அமைச் சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் என்று பலரிடம் பல லட்சங்களை வசூல் செய்து விட்டார்’ என்கிறார்கள். ஆனால், டூர் போகவில்லையாம். திரட்டிய பணமோ ஏராளமாம்!

மிஸ்டர் கழுகு:  புத்தாண்டு... ரீ என்ட்ரி

'சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் செய்யும் பஞ்சாயத்துகள் பற்றிய முழுத் தகவல்களையும் எனக்குத் திரட்டித் தாருங்கள்’ என்று தனது கட்சியினருக்குக் கட்டளையிட்டுள்ளார் ராமதாஸ். அடுத்த பிரஸ்மீட் அதிரடியாம்!

படம்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism