எத்தனை பூஜ்யங்கள் போட வேண்டும் என்று மக்களைக் குழம்பித் தவிக்கவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை, 'ஊழல்களுக்கு எல்லாம் தாய்' என்று வர்ணித்தார்கள். அதற்கான பஞ்சாயத்தே இப்போதுதான் தொடங்கி இருக்கும் நிலையில், 'ஊழல்களின் பாட்டி'யாக அதையும் தாண்டியதாக 'எஸ் பேண்டு' விவகாரம் 'உள்ளேன் ஐயா' சொல்கிறது!

கொள்ளுப் பாட்டிகளும் எள்ளுப் பாட்டிகளுமாக இன்னும் எத்தனை 'பூதங்கள்' ஒளிந்திருந்து நம் சொத்துக்களைச் சுரண்டிச் சாப்பிட்டதோ?

எதை எல்லாம் நம் தேசத்தின் பெருமைகளாக நினைக்கிறோமோ... அவற்றில்தான் ஊழல் பூதங்களின் ஆட்டமும் உச்சத்தில் இருக்கிறது என்று தெரியும்போது, நம்பிக்கை துரோகத்தின் வலியைத் தாங்க முடியவில்லை. மண்ணைக் காக்கும் ராணுவத்தில் லஞ்ச பேரம், நல்ல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் பகல் கொள்ளை, சர்வதேசப் பெருமையைச் சேர்த்துக் கொடுக்க வேண்டிய விளையாட்டில் கொள்ளையோ கொள்ளை என்று படிப்படியாக முன்னேறி... விண்ணில் வலம் வரும் செயற்கைக்கோளையும் ஊழல் வட்டமடிக்கிறது. விஞ்ஞான முறையில் ஊழல் செய்வோருக்கும், விஞ்ஞானத்திலேயே ஊழல் செய்பவர்களுக்கும் நடக்கும் இந்தப் போட்டி, நாட்டை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்குமோ!

நவீன இந்தியாவின் கோயில்களில் ஒன்றாக நாம் கொண்டாடும் 'இஸ்ரோ'வை மையம்கொண்ட இந்த முறைகேட்டையும் அமுக்கிப் போடும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன. 2ஜி முறைகேட்டில் பிரதமர் மௌனம் சாதித்தபோது, 'பாவம், அவருக்குக் கூட்டணி நெருக்கடி' என்று பரிதாபப் பட்டவர்கள் இருக்கலாம். இதுவோ, நெருக்கடி சாக்கு எதுவும் சொல்ல முடியாதபடி, அவரது நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் துறை!

'பிரதமருக்குத் தெரியாமலே இப்படி ஒரு பிரமாண்ட முறைகேட்டுக்குச் சிலர் அடிபோட்டு வைத்தார்கள்' என்ற வாதமும் கேலிக்கு உரியதே! அத்தனை கேவலமானதா, பிரதமரின் ஆளுகைத் திறன்!