Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

இ.வேதநாயகம், பெரிய கொடிப்பலூர்.

கழுகார் பதில்கள்!

'அரசியலுக்கு வந்தால் என் வழி, தனி வழி’ என்கிறாரே ரஜினி?

கழுகார் பதில்கள்!

ரஜினியின் டிசம்பர் 12-ம் தேதி பேச்சுக்கும் டிசம்பர் 28-ம் தேதி பேச்சுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள். 'அரசியல் தலைவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை. நம்மாலும் அப்படி இருக்க முடியாது’ என்று 12-ம் தேதி சொன்னார். அதையே மாற்றிக் கொண்டார் 28-ல். மாற்றி​மாற்றிப் பேசுவது அவரது இயல்பாக மாறிவிட்டது. அதைப் பெரிதாக எடுத்துக்​கொள்ள வேண்டாம்!

 மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்-1

கழுகார் பதில்கள்!

'இந்திய அரசியலில் விலைபோகாத ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே’ என்கி றாரே நாஞ்சில் சம்பத்?

ஒரு கருப்பு சால்வையைப் பறிகொடுத்து இன்னோவாவை இனாமாகப் பெற்ற அவருக்குத்​தானே அதைச் சொல்லும் தகுதி உண்டு!

 சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!

'அடுத்த பிரதமராவதற்கு உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்று கருணாநிதி கூறியுள்ளாரே’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று அடக்கமாகப் பதில் கூறியுள்ளாரே ப.சிதம்பரம்?

##~##

இது அடக்கமான பதில்தான். ஆனால், சமீப காலமாக கோயில் கோயிலாக ப.சி. சென்று வணங்கி வருவதற்குக் காரணம் என்ன வேண்டுதலோ... தெரியவில்லை!

மன்மோகன் சிங்கை விட்டால் ஏ.கே.அந்தோணியா அல்லது ப.சிதம்பரமா என்பதுதான் சோனி​யாவின் சிந்தனையில் உள்ளது. மலையாள மற்றும் கிறிஸ்தவ லாபி ஒன்று சோனி​யாவைச் சுற்றி இயங்குகிறது. அவர்களது சாய்ஸ், அந்தோணி. ஆனால், மன்மோகன் சிங்கைக் கேட்டால் அவர் ப.சிதம்பரத்தைப் பரிந் துரை செய்யலாம்.

காமராஜர் நிராகரித்த, மூப்ப​னா ருக்குத் தடுக்கப்பட்ட நாற்காலி அது. அதை அடையும் நிலை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இப்போதாவது ஏற்படவில்லை என்றால், எப்போதுமே ஏற்படாது என்பதே இன்றைய யதார்த்தம்.

 ஆர்.பி.ப்ரியன், மழையூர்.

கழுகார் பதில்கள்!

2012-ம் ஆண்டின் சிறந்த பேச் சாளர்... அதாவது 'லூஸ் டாக்’ பேச் சாளர்கள் யார் யார்?

அகில இந்திய அளவில் அண்ணா ஹஜாரே, கபில்சிபல், திக் விஜய் சிங் ஆகிய மூவரையும், தமிழக அளவில் கருணாநிதி, மதுரை ஆதீனம், ராமதாஸ் ஆகிய மூவரையும் சொல்லலாம்!

 எஸ்.ராஜகோபாலன், சென்னை-17

கழுகார் பதில்கள்!

தான் ஒரு நாத்திகன் என்பதை நேரடியாகவோ, மறை முகமாகவோ பொதுமேடைகளில் அடிக்கடி தெரிவிப்​பதை கமல்ஹாசன் வழக்கமாகக் கொண்டுள்ளாரே?

அது அவரது தனிப்பட்ட கொள்கைகளில் ஒன்று. அந்தக் கொள்கைதான் சரியானது என்றோ அல்லது மற்றவர்கள் மீது திணிக்கும் வகையிலோ அவர் பேசுவது இல்லை.

'ஆத்திகம் பேசும் அடியவர்க்​கெல்லாம் சிவமே அன்பாகும்...

நாத்திகம் பேசும் நல்லவர்க்​கெல்லாம் அன்பே சிவமாகும்’ என்பது அவருடைய கொள்கை​யாக இருக்கிறது.

சடங்கு சம்பிரதாயங்கள், நல்ல நேரம் கெட்ட நேரம், நியூமராலஜி, நேமாலஜி... தழைத்தோங்கும் திரைத் துறையில் கமல் தன்னை இப்படிக்கொள்வது வியப்புக்குரியது.

 இ.பா.ஹரிராமகிருஷ்ணன், இசையனூர்.

கழுகார் பதில்கள்!

தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா நடத்தப்பட்ட விதத்துக்கும், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நடத்தப்பட்ட விதத்துக்கும் என்ன வித் தியாசம்?

பத்து நிமிடம் தாண்டிப் பேசினால் அங்கு 'பெல்’லைத்தான் அடிக்கிறார்கள். ஆனால் இங்கு குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டிருப்பார்கள்.

'தலைவ​லியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பது இதன் பிறகாவது தெரிந் திருக்குமா?

 கலைஞர் ப்ரியா, வேலூர் (நாமக்கல்).

கழுகார் பதில்கள்!

தனித்துப் போட்டி என்ற ஜெயல​லிதாவின் அறிவிப்பு, கூட்டணிக் கட்சிகளை மிரட்டத்தானே?

ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தில் இப்படி ஒரு யோச​னை இருப்பதை 30.12.12 தேதி​யிட்ட இதழிலேயே  'ஜெயலலிதா 40 தொகுதியிலும் அ.தி.மு.க. நின்று வெற்றி பெறும் என்ற தைரியத்தில் இருக்கிறார்’ என்று சொல்லி இருந்தேன்.

கூட்டணிக் கட்சிகளை மிரட்ட வேண்டிய அளவுக்கு ஜெயலலிதா பலவீனமாகவும் இல்லை. மிரட்டி, தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூடுதலாக வாங்கும் அளவுக்கு அவர்கள் பலமாகவும்இல்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் மட் டும்தான் இப்போது அவர்​களுடன் இருக்கிறது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விஜய காந்துடன்தான் நெருக்கமாக இருக்கிறது. ம.தி.மு.க. ஒருவேளை இந்த அணிக்குள் வரலாம். பா.ம.க. வராது என்று ராமதாஸே சொல்லி விட்டார். எனவே, இப்படி ஓர் அறிவிப்பைச் செய்தாக வேண்டிய நெருக்கடி எதுவும் ஜெயலலிதாவுக்கு இல்லை.

 அர்ஜுனன்.ஜி, திருப்பூர்-7

கழுகார் பதில்கள்!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் தயவு இல்லாமல் மத் தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நி¬​லயில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இணைந்து தேர்தலைச் சந்திக்குமா?

எந்தவிதமான கொள்கை, கோட்​பாட்டுச் சொந்தம் இல்லாமல் வெறும் தொகுதி எண்ணிக்கை பந்தத்தை மட் டுமே வைத்து இங்கு கூட்டணிகள் அமை கின்றன. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அணி சேரும் அசிங்கம் தவிர இங்கு அனைத்துமே நடந்து விட்டது. அதையும் பார்த்து விடலாம் என்று ஆசைப்படுகிறீரா?

 முரு.சொ.தியாகராஜா, மதுரை-2

கழுகார் பதில்கள்!

? மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் அடிமையா?

பிரதமர் நாற்காலியில் உட்காரு​பவர்கள் அப்படித்தான்நினைக்​கிறார்கள். மத்தியில் ஆள்​பவர்கள் எஜமானர்கள் என்றும் மாநிலத்தில் ஆட்சி நடத்துபவர்கள் அதற்கு அடிமைகள் என்றும் நினைப்பது மாதிரி அதிகாரத்தைக் குவித்து விட்டனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி மாநிலப் பட்டியல், மத்தியப் பட்டியல், பொதுப் பட்டியல் என்று அதிகார வரையறை உண்டு. மாநிலப் பட்டியலில் உள்ளவற்றையும் பொதுப் பட்டியலில் இருப்பதையும் மெள்ள மெள்ள மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுசெல்கிறார்கள். இதற்கு எதிரான குரல்தான் மாநில சுயாட்சி என்பது. அதை முன்னெடுப்பது காலத்தின் தேவை.

 ஜான் பாஸ்கோ, பெரம்பூர்.

கழுகார் பதில்கள்!

ஜெயலலிதாவும் சசிகலாவும் வக்கீல்​களுக்காக செலவு செய்யும் தொகை தோராயமாக மாதம் எவ்வளவு இருக்கும்?

கழுகார் பதில்கள்!

இதுவரை செலவு செய்யப்பட்டதே குற்றம் சாட்டப் பட்டசொத்தின் அளவில் கால் பகுதியை நெருங்கி இருக் குமே?

 ரேவதி ப்ரியன், ஈரோடு-1

கழுகார் பதில்கள்!

நாஞ்சில் சம்பத் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை தமிழக அரசு வாபஸ் வாங்கி விட்டதே?

புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகச் சொல்லி வழக்கு போடு கிறார்கள். களங்கம் ஏற்படுத்தியவர் கட்சி மாறியதும் வழக்கை வாபஸ் வாங்குகிறார்கள்.

அவதூறு வழக்கை, இதைவிட யாரும் அவதூறு செய்துவிட முடியாது.

கழுகார் பதில்கள்!