Election bannerElection banner
Published:Updated:

தெலங்கானா: அரசு அமைக்க சந்திரசேகர ராவுக்கு ஆளுநர் அழைப்பு!

ஐதராபாத்: தெலங்கானாவில் அரசு அமைக்க சந்திரசேகர ராவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் புதிய அரசு அமைக்க தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவுக்கு ஆந்திர ஆளுனர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி உதயமாகிறது. அதன் ஆளுனராக ஆந்திர ஆளுனர் நரசிம்மனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானாவில் அதிக இடங்களை ராஷ்ட்ரிய சமிதி கட்சி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஏற்று வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி காலை 8:15 மணிக்கு முதலமைச்சராக சந்திரசேகராவ் பதவியேற்க உள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு