Published:Updated:

ராகுலை ஜோக்கர் என விமர்சித்த தலைவரை கட்சியிலிருந்து நீக்கியது காங்கிரஸ்!

திருவனந்தபுரம்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஜோக்கர் என கடுமையாக விமர்சித்த மூத்த தலைவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் முஸ்தபா, "தேர்தல் பிரசாரத்தின்போது, கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தனிக்குழுவை சார்ந்தே பிரசாரம் செய்தார். ஒரு ‘ஜோக்கர்’ போல அவர் செயல்பட்டது வெற்றியை தரவில்லை. எனவே அவர் கட்சி பதவியில் தொடரக்கூடாது. உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று பகிரங்கமாக விமர்சித்தார்.

முஸ்தபாவின் இந்த விமர்சனம் கேரள காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் முஸ்தபா மீது காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சுதீரன் கூறுகையில், "முன்னாள் அமைச்சர் முஸ்தபா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். அவருடைய பேச்சுக்கு அவரிடம் விளக்கம் பெறப்படும்" என்றார்.