Published:Updated:

பிரதமர் மோடியை ஜூன் 3ஆம் தேதி சந்திக்கிறார் ஜெயலலிதா!

பிரதமர் மோடியை ஜூன் 3ஆம் தேதி சந்திக்கிறார் ஜெயலலிதா!
பிரதமர் மோடியை ஜூன் 3ஆம் தேதி சந்திக்கிறார் ஜெயலலிதா!
பிரதமர் மோடியை ஜூன் 3ஆம் தேதி சந்திக்கிறார் ஜெயலலிதா!

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜூன் 3ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேச உள்ளார்.

நரேந்திர மோடியுடன் சுமூகமான நட்பில் இருந்தவர் முதல்வர் ஜெயலலிதா. குஜராத் முதல்வராக மோடி 2வது முறை பதவியேற்றபோது கலந்து கொண்ட ஜெயலலிதா, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை விமர்சித்து பேசினார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் ஜெயலலிதா வாழ்த்து கூறினார். ஆனால், பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்றதால் அந்த விழாவை ஜெயலலிதா புறக்கணித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ஜூன் 3ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா சந்திக்க உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, தமிழகம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும், தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.