Published:Updated:

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டாம்: மோடி அறிவுறுத்தல்

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டாம் என மத்தியப் பிரதேச மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

போராட்டமும், வெற்றியும் ,நாட்டுப்பற்றும் நிறைந்த பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்களும், இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்போவதாக ஏற்கனவே மத்திய பிரதேச அரசு அறிவித்திருந்தது.

அதேபோல், குஜராத் அரசும் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த தகவலை அந்த மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடையை வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டாம் என்று  மத்தியப் பிரதேச மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக,  மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கும் முடிவு குறித்து குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.