Published:Updated:

24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில் மோடி மனைவி!

விகடன் விமர்சனக்குழு
24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில் மோடி மனைவி!
24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில் மோடி மனைவி!
24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில் மோடி மனைவி!

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென்னுக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என முதல் முறையாக தெரிவித்திருந்தார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.

ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜசோதா தனது மூத்த சகோதரரான அசோக் மோடியுடன் ராம்ஜி மந்திருக்கு எதிரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மோடியின் மனைவி ஜசோதாவுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, அவருக்கு சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய நான்கு காவலர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் ஏதாவது உள்ளதா என எந்நேரமும் வாகனம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளரான திரிவேதி தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடன் எப்போதும் ஒரு காவலர் உடன் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.