Published:Updated:

பிரதமர் இல்லத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை!

விகடன் விமர்சனக்குழு
பிரதமர் இல்லத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை!
பிரதமர் இல்லத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை!
பிரதமர் இல்லத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை!

புதுடெல்லி: பாதுகாப்பு கருதி பிரதமர் இல்லத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் எண்.7 ரேஸ்கோர்ஸ் சாலையில் பிரதமர் இல்லம் அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள இந்த வளாகத்தில் மொத்தம் 3 பங்களாக்கள் உள்ளது. இந்த இல்லத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு, பிரதமர் ஹெலிகாப்டரில் செல்வதும், அங்கிருந்து திரும்புவதும் வழக்கமாக உள்ளது.

பிரதமர் இல்லத்தில் இருந்து கெமால் அடாதுர்க் சாலை, சப்தர்ஜங் சாலை, அரபிந்தோ மார்க் வழியாக காரில் பயணிக்க வேண்டும் என்றால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, கூடுதல் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ள வேண்டும். எனவே இந்த இடையூறுகளை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும், நரேந்திர மோடிக்கு இருந்து வரும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும் பிரதமர் இல்லத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமருக்கான தனி பாதுகாப்பு படை இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சுரங்கப்பாதை, பிரதமர் இல்லத்தில் இருந்து அடாதுர்க் சாலை வரை பூமிக்கு அடியிலும், அதற்கு மேல் தரையிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.