Published:Updated:

அரசு பங்களாக்களை காலி செய்ய 55 முன்னாள் அமைச்சர்களுக்கு அதிரடி நோட்டீஸ்!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: அரசு பங்களாக்களை காலி செய்ய சொல்லி 55 முன்னாள் அமைச்சர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து, பதவி பறி போன முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து தருமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுமார் 55 முன்னாள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், ஜூன் 26 ஆம் தேதிக்குள், பதவி பறிபோன அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து கொடுத்துவிட்டு அரசுக்கு சொந்தமான அசோகா ஓட்டலில் ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் தங்கி தங்களது அலுவல்களை மேற்கொள்ளலாம்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் பங்களாக்களில் அவர்கள் பூஜைகள் செய்யவும், குடியேறவும் விரைவில் திட்டமிடும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் அரசு பங்களாக்களை காலி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.