Published:Updated:

உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சி: மாயாவதி வலியுறுத்தல்

விகடன் விமர்சனக்குழு
உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சி: மாயாவதி வலியுறுத்தல்
உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சி: மாயாவதி வலியுறுத்தல்
உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சி: மாயாவதி வலியுறுத்தல்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு விட்டது என்றும்,  குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நேற்று 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகளின் அக்கறை இன்மையினாலே இந்த கொடூர சம்பவம் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் புகாரை வாபஸ் வாங்குமாறு குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை, அச்சிறுமிகளின் தாயாரை வீடு புகுந்து தாக்கியதில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.  இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கெட்டு விட்டது என்றும், இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.