Published:Updated:

பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுகின்றனர்!

விகடன் விமர்சனக்குழு
பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுகின்றனர்!
பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுகின்றனர்!
பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுகின்றனர்!

புதுடெல்லி: பா.ஜ.க. தலைவர்களில் பெரும்பாலானோர் அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

பா.ஜ.க.வில் நிர்வாகி ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும். இந்நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல், அக்கட்சியின் துணைத் தலைவர்கள் ஜூவல் ஓரம், உமாபாரதி, ஸ்மிர்தி இரானி, பொது செயலாளர்கள் அனந்தகுமார், தவர் சந்த் கெய்க்வாட் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும், பொருளாளர் பியூஸ் கோயல், செய்தித் தொடர்பாளர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவேத்கர் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதனால் பா.ஜ.க.வில் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட உள்ளனர். இது தொடர்பாக இன்று  பா.ஜ.க. மூத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை வருகிற ஜூன் 15 ஆம் தேதிக்கு பின்னர் விரிவாக்கம் செய்ய எண்ணியுள்ளார். இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தேசிய தலைவர் பதவிக்கு, ராஜநாத் சிங்குக்கு பதிலாக நட்டா அல்லது அமித்ஷா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், குஜராத் மாநில தலைவர் ஓம் பிகாஷ் மாத்தூர் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.