Published:Updated:

பழைய திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து  அவர் தனது டுவிட்டர் தளத்தில், ''கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம்.

மாறாக, அந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆட்சி மாறியதும், திட்டங்களின் பெயர்களை மாற்றுவது பழைய கால நடைமுறை'' எனக் கூறியுள்ளார்.