Published:Updated:

370வது பிரிவை ஊதி பெரிதாக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் கோரிக்கை!

விகடன் விமர்சனக்குழு
370வது பிரிவை ஊதி பெரிதாக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் கோரிக்கை!
370வது பிரிவை ஊதி பெரிதாக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் கோரிக்கை!
370வது பிரிவை ஊதி பெரிதாக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் கோரிக்கை!

புதுடெல்லி: 370வது பிரிவை ஊதி பெரிதாக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறியுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சிறப்பு சட்டத்தால் அம்மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மத்திய அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது என பிரதமர் அலுவலக இணையமைச்சராக பொறுப்பேற்ற ஜிதேந்திர சிங் கூறினார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 370 பற்றிய சர்ச்சைக்குரிய பிரச்னையை ஊதி பெரிதாக்க வேண்டாம் என மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் இணையதளத்தில், ''பா.ஜ.க. தலைமையிலான புதிய அரசு இன்னும் முழுமையாக ஆட்சிப் பொறுப்பில் அமரவில்லை. அதற்குள் சர்ச்சைக்குரிய அரசியல் சாசனப் பிரிவு 370ஐ ஊதி பெரிதாக்குவது தேவையில்லாதது.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை எதுவும் பாழ்படுத்தி விட முடியாது. ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். புதிய அரசு வழக்கமான அலுவலக பணிகளை முழுமையாக பொறுப்பெடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே இவ்வாறு பிரச்னைகளை எழுப்புவது தேவையற்றது'' எனக் கூறியுள்ளார்.