Published:Updated:

முண்டேவுக்கு இரங்கல்: 16வது மக்களவை முதல் கூட்டம் ஒத்திவைப்பு! (படங்கள்)

Vikatan Correspondent
முண்டேவுக்கு இரங்கல்: 16வது மக்களவை முதல் கூட்டம் ஒத்திவைப்பு! (படங்கள்)
முண்டேவுக்கு இரங்கல்: 16வது மக்களவை முதல் கூட்டம் ஒத்திவைப்பு! (படங்கள்)

புதுடெல்லி: இன்று காலை தொடங்கிய 16வது மக்களவை கூட்டத்தில் மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டோவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவை கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முண்டேவுக்கு இரங்கல்: 16வது மக்களவை முதல் கூட்டம் ஒத்திவைப்பு! (படங்கள்)

16வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து மக்களவை கூட்டம் தொடங்கியது. அப்போது, முதல் தீ்ர்மானமாக வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முண்டேவுக்கு இரங்கல்: 16வது மக்களவை முதல் கூட்டம் ஒத்திவைப்பு! (படங்கள்)

பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக தற்காலிக சபாநாயகர் அறிவித்தார்.

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்றும் நாளையும் பதவியேற்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

முண்டேவுக்கு இரங்கல்: 16வது மக்களவை முதல் கூட்டம் ஒத்திவைப்பு! (படங்கள்)

முண்டேவின் மறைவைத் தொடர்ந்து நாளையும்,  நாளை மறுநாளும் எம்பிக்கள் பதவியேற்கவுள்ளனர். அதைத்தொடர்ந்து 6ஆம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மக்களவைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தற்காலிக சபாநாயகராக செயல்படுவார். 9ஆம் தேதி நடைபெறவுள்ள இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்.

முண்டேவுக்கு இரங்கல்: 16வது மக்களவை முதல் கூட்டம் ஒத்திவைப்பு! (படங்கள்)

10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மக்களவை ஒத்திவைக்கப்படுகிறது.

9 ஆம் தேதி கூடும் மாநிலங்களவையும், மக்களவையுடன் சேர்த்து 11 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.