Published:Updated:

மணல் கொள்ளையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: தே.மு.தி.க தீர்மானம்

Vikatan Correspondent
மணல் கொள்ளையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: தே.மு.தி.க தீர்மானம்
மணல் கொள்ளையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: தே.மு.தி.க தீர்மானம்
மணல் கொள்ளையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: தே.மு.தி.க தீர்மானம்

சென்னை: தாது மணல் கொள்ளையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று விஜயகாந்த் தலைமையில் நடந்த தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2014 பாராளுமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதில், இயற்கை நமக்கு அளித்த கொடையான கனிம வளங்களை அதிகாரம் படைத்த கும்பல் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டியவர்கள் தடுக்காமல் கனிம வள கொள்ளைக்கு துணை போகின்றனர். கடற்கரை மணல் என்று சொல்லக் கூடிய தாது மணல் கொள்ளையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடைசி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், இலங்கை தமிழர், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்கள் அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்க தகுந்த ஆவன செய்ய வேண்டும், மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர் ஆதாரங்களை சீர்படுத்தி, நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தலின்போது பண விநியோகத்தை தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.