Published:Updated:

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவோம்: மோடி உறுதி!

Vikatan Correspondent
 மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவோம்:  மோடி உறுதி!
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவோம்: மோடி உறுதி!
 மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவோம்:  மோடி உறுதி!

புதுடெல்லி: நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

16 ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றம் வந்த பிரதமர், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாட்டு மக்களின் நம்பிக்கையையும், விருப்பத்தையும் நிறைவேற்ற நாடாளுமன்றம் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், " ஜனநாயத்தின் கோவில் என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தில், மக்களின் தேவைகளையும், நம்பிக்கையையும், அவர்களது கனவுகளையும் நிறைவேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்"  என்று உறுதியளித்தார்.