Published:Updated:

மீண்டெழுமா திமுக?

Vikatan Correspondent
மீண்டெழுமா திமுக?
மீண்டெழுமா திமுக?
மீண்டெழுமா திமுக?

கடந்த காலங்களிலும் எத்தனையோ தேர்தல்களில் தோல்வியை சந்தித்து, அதிலிருந்து மீண்டெழுந்து வந்துள்ளது திமுக.  ஆனால் ஒரு இடம் கூட கிடைக்காத, சில தொகுதிகளில் 3 வது மற்றும் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையை திமுக சந்தித்தது  2014 நாடாளுமன்ற தேர்தல்தான்.

இந்நிலையில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில், கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் மாவட்ட செயலாளர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கட்சி அமைப்பில் மாற்றம் செய்யப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கட்சியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில் சில அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசியபோது தெரிவித்துள்ளார்.

"திமுக கட்டுக்கோப்பான கட்சி. பழுதுபார்க்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவைகள் என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கின்றன. அவைகளை எல்லாம் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் ஆராய்ந்து அறிந்து அன்றைக்கே கூற முயன்றோம். பிறந்த நாள் விழா இருந்ததால், சற்று தாமதித்து பிறகு அறிவிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் அந்த முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பிறகு திமுக. கூர்தீட்டிய வாளாக விளங்கும், பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில்   திமுகவின் தேர்தல் தோல்விக்கான காரணமாக   நீங்கள் கருதுவது என்ன...?  உயர்நிலை செயல்திட்ட குழு தீர்மானம் மற்றும் கருணாநிதியின் அறிவிப்பு போன்றவை திமுகவை தோல்வியிலிருந்து மீண்டு எழ வைக்குமா? இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?