Published:Updated:

ஜனாதிபதி உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Vikatan Correspondent
ஜனாதிபதி உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஜனாதிபதி உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஜனாதிபதி உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்ற உள்ள உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த மத்திய அமைச்சர் முண்டேவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு, அவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நாளை நடக்கும் கூட்டத் தொடரின்போது புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், வரும் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புதிய அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்ற உள்ளார். இதற்கான உரையை மத்திய அமைச்சரவை தயார் செய்துள்ளது.

இதையடுத்து, ஜனாதிபதி ஆற்றவுள்ள உரைக்கு, டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.