Published:Updated:

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி!

Vikatan Correspondent
சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி!
சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி!
சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி!

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி  செய்துவிட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், "தங்களின் சொத்துக்களை முடக்கியது தவறு. சொத்துக்களை முடக்குவதற்கு விசாரணை அதிகாரிக்கு அதிகாரமில்லை. எனவே, சொத்துக்களை விடுவிக்க வேண்டும்" எனக்கூறி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளரவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "சொத்துக்களை முடக்கியது குறித்த அடிப்படைக் கேள்வி தற்போது ஏன் எழுகிறது? சொத்துக்களை விசாரணை அதிகாரி முடக்கியது சரிதான். சொத்துக்களை முடக்க விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவுக்கு அதிகாரம் உண்டு" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.