Published:Updated:

மோடியுடன் சந்திப்பு: நேற்று முதல்வர் ஜெயலலிதா; இன்று சித்தராமையா!

Vikatan Correspondent
மோடியுடன் சந்திப்பு: நேற்று முதல்வர் ஜெயலலிதா; இன்று சித்தராமையா!
மோடியுடன் சந்திப்பு: நேற்று முதல்வர் ஜெயலலிதா; இன்று சித்தராமையா!
மோடியுடன் சந்திப்பு: நேற்று முதல்வர் ஜெயலலிதா; இன்று சித்தராமையா!

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார்.

கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சதானந்தா கவுடாவை சந்தித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (4ஆம் தேதி) மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்போது, கர்நாடகா மாநிலப் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தாக தெரிகிறது.

இதற்கிடையே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று (3ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது 64 பக்க கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மோடியிடம் வழங்கினார். அந்த மனுவில் முதன்மையானதாக நீர் நிலைகள் மீதான பிரச்னையை முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரி அணை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருப்பது காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு சாதகமான நடவடிக்கைகள் கூடாது என்பதற்கான வலியுறுத்தலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.