Published:Updated:

உ. பி. பாலியல் வன்கொடுமை: ஊடகங்கள் மீது முலாயம் சிங் பாய்ச்சல்

Vikatan Correspondent
உ. பி. பாலியல் வன்கொடுமை: ஊடகங்கள் மீது முலாயம் சிங் பாய்ச்சல்
உ. பி. பாலியல் வன்கொடுமை: ஊடகங்கள் மீது முலாயம் சிங் பாய்ச்சல்
உ. பி. பாலியல் வன்கொடுமை: ஊடகங்கள் மீது முலாயம் சிங் பாய்ச்சல்

லக்னோ:  உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளை வெளியிடுவதால், ஊடகங்கள் மீது ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பாய்ந்துள்ளார்.

முலாயம் சிங் யாதவிடம் உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கின் நிலை பற்றி நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முலாயம் சிங் யாதவ், " நீங்கள் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், நான் என்னுடைய வேலையை செய்கிறேன். ஏனைய பிரச்னைகள் மீதும் கவனம் செலுத்துங்கள்"  என்று கோபமாக பதிலளித்தார்.

நேற்று முலாயம் சிங் யாதவ் மகனும் உத்தரபிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ்,"கூகுளில் நீங்கள் சென்று இதுபோன்ற ( பாலியல் வன்கொடுமி) குற்ற சம்பவங்களை தேடினால் அது நாடுமுழுவதும் உள்ள நகரங்களில் நடப்பதை காட்டும் என்று கூறியது பெருத்த சர்ச்சையான நிலையில், இன்று முலாயம் சிங் யாதவ் ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.