Published:Updated:

கோபிநாத் முண்டேவின் இலாகா நிதின் கட்கரியிடம் ஒப்படைப்பு!

Vikatan Correspondent
கோபிநாத் முண்டேவின் இலாகா நிதின் கட்கரியிடம் ஒப்படைப்பு!
கோபிநாத் முண்டேவின் இலாகா நிதின் கட்கரியிடம் ஒப்படைப்பு!
கோபிநாத் முண்டேவின் இலாகா நிதின் கட்கரியிடம் ஒப்படைப்பு!

புதுடெல்லி: மறைத்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கவனித்து வந்த இலாகா நிதின் கட்சிகரியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் கோபிநாத் முண்டே. இவர் நேற்று (3ஆம் தேதி) டெல்லியில் சாலை விபத்தின்போது மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார்.

இதையடுத்து, கோபிநாத் முண்டே கவனித்து வந்த ஊரக வளர்ச்சித்துறை பொறுப்பை நிதி கட்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள நிதின் கட்கரி ஊரக வளர்ச்சி துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.