Published:Updated:

ஒருவேளை அது நடந்தே விட்டால்...?!

கே.கே.மகேஷ்

##~##

ரு சின்ன தொலைநோக்குக் கற்பனை!

 அகில உலகமும் ஆசைப்பட்டபடியே ஜெயலலிதா இந்தியப் பிரதமர் ஆகிவிடு கிறார். அப்புறம் என்ன நடக் கும்? எவ்வளவோ பார்த்துட் டோம்... இதையும்தான் பார்த்துடுவோமே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜனாதிபதி தேமேவென்று அமர்ந்திருக்கும் ராஷ்டிரபதி பவன், இனி உலகத் தரமான குழந்தைகள் மருத்துவமனையாக மாறும். பிரதமர் வந்தால், எழுந்து நின்று விழுந்து கும்பிடும் அளவுக்கு ஜனாதிபதி பதவியின் 'மாண்பு அதிகரிக்கப்படும்’. உ.பி. கவர்னர் ம.பி-க்கும், ம.பி. கவர்னர் உ.பி-க்கும் மாற்றப்படுவார்கள். நாடாளுமன்றத்திலும் செங்குத் தாக இரட்டை றெக்கை விரித் துப் பறக்கும் குதிரைச் சிலை அமைக்கப்படும். முன்னாள் மத்திய மந்திரிகள் வீடுகளில் வருமான வரித் துறை ரெய்டு வாரக்கணக்கில் நடைபெறும். சோனியா, மன்மோகன் மட்டும்இன்றி கருணாநிதி, ஷெட்டர், அச்சுதானந்தன், ரங்கசாமி, மாயாவதி, ப.சிதம்பரம், மு.க.அழகிரி, அரவிந்த் கெஜ்ரிவால், வாட்டாள் நாகராஜ் ஆகியோர் திகிலான இடத்தில் வைக்கப்படுவார்கள். மற்ற தலைவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக வேண்டியது இருக்கும்.

சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நடத்துகிற தொழில் எதுவாக இருந்தாலும், அது அரசுடமை ஆக்கப்படும். அனைத்து ரயில்களுக்கும் பச்சை பெயின்ட் அடிக்கப்படும். படிப்படியாக, விமானங்களுக்கும் இந்தத் திட்டம்விரிவு படுத்தப்படும்.

ஒருவேளை அது நடந்தே விட்டால்...?!

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அவை தள்ளிவைக்கப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும். காரணம், சபையில் பேச யாரையும் அனுமதித்தால்தானே?  

'இந்தியாவின் இன்றைய பொருளாதார மந்த நிலைக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்!’ என்று அறிக்கை விடும் ஜெ., நிதிப் பற்றாக்குறை யைச் சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இனி மாநில அரசு ஊழியர்களுக்கு இணையாகக் குறைக்கப்படும்.  'இந்தியாவில் நிலவும் மின் தடைக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவே காரணம். அவர் நாட்டில் உபரியாக இருக்கும் மின்சாரத்தை இந்தியாவுக்குத் தர மறுக்கிறார். திகாரில் இருக்கும் மன்மோகன் தனது நண்பர் ஒபாமாவிடம் இது பற்றிப் பேசாதது ஏன்?’ என்று காட்டமாக அறிக்கைவிடுவார். அண்டை நாட்டுப் பிரதமர் களுடன் சண்டையிட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக் குப் போடுவார். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் அ.தி.மு.க. மத்திய அமைச்சர் கள், 'அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்து கையெழுத்துப் போடுறேன்’ என்று ஒப்பந்தங்களை அம்போவென விட்டுவிட்டு ஓடிவருவார்கள். தெரியாத்தனமாகக் கையெழுத்துப் போட்டவர்கள், நாடு திரும்பும் முன் பதவியைப் பறிகொடுப்பார்கள். ஐ.நா. சபை, காமன்வெல்த் மாநாடு போன்றவற்றுக்குச் சென்றால், முதல் ஆளாகப் பத்தே பத்து நிமிடங்கள் பேசிவிட்டு வெளிநடப்பு செய்யும் ஜெ., 'இந்தி யாவை உலக நாடுகள் அவமதித்துவிட்டதாக’ப் பேட்டி கொடுப்பார். யார், யாரை அவமதித்தது என்பது புரியாமல் உலகத் தலைவர்கள் எல்லாம் குழம்பிப்போவார்கள்.

சுதந்திர தினத்தன்று கொடிஏற்றிவிட்டு, 'ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்’ என்று முழங்குவார். அணிவகுப்புகள் நீண்ட நேரம் நடைபெறும் என்பதால், அதை வீடியோ கான்ஃபரன்ஸில் பார்த்துக்கொள்வதாகப் போய்விடுவார்.

'என்னங்க இது... ஜெ. பிரதமரானால் தமிழ்நாட்டுக்கு ஒரு நன்மையும் கிடையாதா?’ என்று நீங்கள் கதறிப் பதறிக் கேட்பது கேட்கிறது. இங்கே முதல்வராக விஜயகாந்த் இருக்கும்போது, அம்மா எப்படி தமிழகத்துக்கு உதவுவார்? அதிர்ச்சியடையாதீர்கள். இப்போது 9 எம்.பி-க்களை வைத்திருக்கும் ஜெயலலிதாவே நாளை இந்தியப் பிரதமராகும்போது, 29 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் விஜயகாந்த் தமிழக முதல்வராகிவிட மாட்டாரா என்ன?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!