Published:Updated:

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மேற்பார்வைக்குழு குறித்து இன்று முடிவு!

Vikatan Correspondent
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மேற்பார்வைக்குழு குறித்து இன்று முடிவு!
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மேற்பார்வைக்குழு குறித்து இன்று முடிவு!
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மேற்பார்வைக்குழு குறித்து இன்று முடிவு!

புதுடெல்லி: முல்லைப்பெரியாறு அணைக்கான மேற்பார்வைக்குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்க உள்ளது.
 
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானது என கடந்த மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 142 அடிக்கு நீரை தேக்க அனுமதி வழங்கியது. மேலும், முல்லைப்பெரியாறு அணைக்கான மேற்பார்வைக்குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி, முல்லைப்பெரியாறு அணைக்கான மேற்பார்வைக்குழுவை அமைப்பதற்கான திட்டத்தை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, முல்லைப்பெரியாறு அணைக்கான மேற்பார்வைக்குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்க உள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

3 பேர் கொண்ட இந்த குழுவில், மத்திய நீர் ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் தலைவராக இருப்பார். கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி, குழுவின் உறுப்பினர்களாக இடம் பெறுவர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை 142 அடியாக உயர்த்தவும், அணையின் பாதுகாப்பை மேற்பார்வை செய்யவும் இந்த குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்பார்வைக்குழுவின் அலுவலகத்திற்கான இடத்தை கேரள அரசும், குழுவின் செலவை தமிழக அரசும் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.