Published:Updated:

ஆளுநர்களை நீக்குவது பழிவாங்கும் செயல்: காங்கிரஸ் கண்டனம்

Vikatan Correspondent
ஆளுநர்களை நீக்குவது பழிவாங்கும் செயல்: காங்கிரஸ் கண்டனம்
ஆளுநர்களை நீக்குவது பழிவாங்கும் செயல்: காங்கிரஸ் கண்டனம்
ஆளுநர்களை நீக்குவது பழிவாங்கும் செயல்: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: மாநில ஆளுநர்களை நீக்குவது பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மாநில ஆளுநர்களை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ''பல்வேறு மாநில ஆளுநர்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவது, சர்வாதிகார நடவடிக்கை.

ஆட்சி அதிகாரம் மாறியதன் காரணமாக தன்னிச்சையாக ஆளுநர்களை நீக்க முடியாது. அவ்வாறு மாற்றினால், கடும் விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும். முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை புதிய அரசு நீக்குவது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு முறைகளுக்கு எதிரானது" என்று  தெரிவித்துள்ளார்.