Published:Updated:

பா.ஜ.க. மூத்த தலைவர் யஸ்வந்த் சின்காவுக்கு ஜாமீன்!

Vikatan Correspondent
பா.ஜ.க. மூத்த தலைவர் யஸ்வந்த் சின்காவுக்கு ஜாமீன்!
பா.ஜ.க. மூத்த தலைவர் யஸ்வந்த் சின்காவுக்கு ஜாமீன்!
பா.ஜ.க. மூத்த தலைவர் யஸ்வந்த் சின்காவுக்கு ஜாமீன்!

ஹசாரிபாக்: பா.ஜ.க மூத்த தலைவர் யஸ்வந்த் சின்காவுக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் கடந்த 2ஆம் தேதி மின்சார பிரச்னைக்காக பா.ஜ.க மூத்த தலைவர் யஸ்வந்த் சின்கா போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின்போது மின்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட யஸ்வந்த் சின்கா, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு ஹசாரியாக் நீதிமன்றத்தில் யஸ்வந்த் சி்ன்கா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், யஸ்வந்த் சின்காவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, யஸ்வந்த் சி்ன்கா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.