Published:Updated:

தேசியவாத காங்கிரசின் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்!

Vikatan Correspondent
தேசியவாத காங்கிரசின் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்!
தேசியவாத காங்கிரசின் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்!
தேசியவாத காங்கிரசின் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்!

கொகிமா: நாகாலாந்தில் தேசியவாத காங்கிரசின் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

நாகாலாந்து மாநிலத்தில், நாகாலாந்து மக்கள் முன்னணியின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த முன்னணியில் பா.ஜ.க.வும் உள்ளது. 60 பேர் கொண்ட நாகாலாந்து சட்டசபையில் இந்த கூட்டணிக்கு 51 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு பைவாங் கொன்யாக் என்ற ஒரே எம்.எல்.ஏ. மட்டும் உள்ளார்.

இந்நிலையில், 4 பேரை சட்டமன்ற உறுப்பினர்களாக கொண்ட தேசியவாத காங்கிரசின் 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்று பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதனால் ஒரேயொரு உறுப்பினரைக் கொண்டிருந்த பா.ஜ.க.வின் பலம் சட்டசபையில் 4 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தேசியவாத காங்கிரசுக்கு குமோ என்ற எம்.எல்.ஏ. மட்டுமே உள்ளார்.

பா.ஜனதாவில் இணைந்த எம்.எல்.ஏ.க்களான தேசியவாத காங்கிரசின் மாநிலத் தலைவர் இம்திலெமா சங்தாம், டி.எம்.லோதா, மோன்லுமோ கிகோன் ஆகியோர் தலைநகர் கொகிமாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''நாகாலாந்து ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்காகவே நாங்கள் பா.ஜ.க.வில் இணைந்தோம்.

இதுகுறித்து நாங்கள் கட்சி மேலிடத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தெரிவித்து இருந்தால் நாங்கள் இணைவதை கட்சி விரும்பி இருக்காது" என்றனர்.