ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பொன்விழி, அன்னூர்.

கழுகார் பதில்கள்!

'எம்.ஜி.ஆர். வந்ததும் ஆட்சியைத் தந்து விடுவேன்’ என, அன்று சொன்ன கருணாநிதி பற்றி?

கருணாநிதி தன்னுடைய கம்பீரத்தை இழந்து பேச ஆரம்பித்த காலகட்டம் (1984) அது!

கழுகார் பதில்கள்!
##~##

'எனக்கு இத்தனை ஆண்டு தண்டனை போதாதா?’ என்று பொதுமக்களைப் பார்த்துக் கேட்டார். பதவி இல்லாமல் இருப்பதைத் தண்டனையாகக் கருதிப் பேசினார். எம்.ஜி.ஆர். உடல் நலிவுற்று அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது நடந்த தேர்தல் அது. அதனால், அனுதாப அலை அதிகமாகவே அ.தி.மு.க. பக்கம் வீசியது. அதை எப்படிச் சமாளிப்பது என்று கருணாநிதிக்குத் தெரியாத நிலையில், 'என்னிடம் முதலமைச்சர் பதவியைத் தாருங்கள். என்னுடைய நாற்பது ஆண்டுகால நண்பர் எம்.ஜி.ஆர். உடல்நிலை தேறி வந்ததும் நான் அவரிடம் முதலமைச்சர் பதவியை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறேன்’ என்றார். ஜனநாயகத்தையும் தேர்தலையும் கேலிக் கூத்தாக்கும் வகையில் அவரது அன்றைய பேச்சுக்கள் அமைந்திருந்தன. அந்தத் தேர்தலிலும் அவருக்குத் தோல்வியே தொடர்ந்தது. சில நேரங்களில், ஆவேசப் பேச்சுக்கள் அபத்தமாக இருக்கும். அதற்கான உதாரணம் இவை!

 எம்.சிவகுமார், வேதாரண்யம்.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

சாதித் தலைவர்களை ஒற்றுமைப்​படுத்தும் டாக்டர் ராமதாஸின் முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும்?

சாதி என்பதே வேற்றுமைப்படுத்தும் வார்த்தை. அது எப்படி ஒற்றுமைப்படுத்தும்? எங்களுக்குள் சாதி வேறுபாடு இல்லை என்று இவர்கள் சொல்வார்​களானால் அதை ஒற்றுமை என்று சொல்லலாம்.

 வி.பரமசிவம், சென்னை-25.

கழுகார் பதில்கள்!

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மறைவு குறித்து?

அமெரிக்காவில் வசதியாக இருந்தவர். அங்கிருந்து கட்டுரைகள் எழுதுவார். விடுமுறையில் வந்து போவார். 1987 காலகட்டத்தில் திடீரென, 'இனி அமெரிக்கா செல்வது இல்லை’ என்று முடி வெடுத்தார். சொகுசாக சென்னையில் உட்​கார்ந்து எழுதாமல் தமிழகக் கிராமங்களுக்குள் சென்றார். இளைஞர்கள், மாணவர்களை வைத்து கிராமச் சீர்திருத்தத்தில் இறங்கினார். குளத்தை சீர்படுத்தினார், ஆற்றுப் பரப்பை அகலப்படுத்தினார், 'நாட்டைத் திருத்த நீங்கள் திருந்துங்கள்’ என்றார்.

அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்றாலும், பெரிய நிறுவனங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக இருக்காமல் விவசாயத்தைப் பற்றி அதிகம் கவலைப் பட்டார். தஞ்சை மண்டலத்தை செழிக்கும் இட மாக மாற்ற எத்தனையோ ஆலோசனைகளைச் சொன்னார். நதி நீர் இணைப்புக்காக நடந்தார். ஊழலுக்கு எதிராகத் துடித்தார். தலைவர்களின் பிம்பங்களை உடைத்தார். 'நீதான் தம்பி முதல மைச்சர்’ என்று இளைஞர்களைப் பார்த்துச் சொன்னார். இன்றைக்கு எத்தனையோ பேர், தன்னம்பிக்கை கட்டுரைகளை எழுதுகிறார்கள். அனைத்துக்கும் தமிழில் முதல்சுழியாக அவரே இருந்தார். அவரது புத்தகங்களைக் கையில் வைத்திருப்பதை பெருமையாகக் கருதினார்கள் இளைஞர்கள்.

அவர் இறந்தாலும், 'நம்மால் முடியும் தம்பி_ நம்பு’ என்ற சொற்கள் எப்போதும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கும்!

 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

காலங்கள் மாறினாலும் அரசியல் மாறவில்லையே?

கட்சித் தலைவர்கள் மாறாமல் காலங்கள் மாறி என்ன பயன்? எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் முதல் இருபது ஆண்டும், கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் அடுத்த இருபது ஆண்டும் அரசியல் கழிந்துள்ளது. இந்த மூவர் குணாம்சத்தைப் பொறுத்ததாகத்தானே அரசியல் இருக்கும். இதில் மாறுதல் இல்லாமல் தொடர்கிறது. 'மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற சமூக விஞ்ஞானம்கூட தமிழகத்தில் தோற்று விட்டதே!

 எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

கழுகார் பதில்கள்!

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாகக் கருணாநிதி கூறியுள்ளாரே?

குழப்பத்தை இந்த இரண்டு கட்சியில் இருப்பவர்கள்தான் செய்ய முடியுமே தவிர வெளி ஆட்களால் அது நடக்காது.

 எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

கழுகார் பதில்கள்!

'விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டோம்’ என்கிறாரே பிரதமர்?

தோல்விக்குப் பிறகு சொல்ல வேண்டியதை எல்லாம் இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டாரே! பரவாயில்லை... இந்த நேர்மை பிடிச்சிருக்கு!

 மா.ஜெகதீசன், சீர்காழி.

கழுகார் பதில்கள்!

ராகுல் இனி என்ன செய்ய வேண்டும்?

மாநில மக்களின் விருப்பங்களைத் தீர்மானிக்கக் கூடிய அகில இந்தியத் தலைமையாக ராகுல் மாற வேண்டும். மாநிலத் தலைவர்களை டெல்லியில் உட்கார்ந்து தீர்மானிக்கக் கூடாது. வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் வெளியிடக்கூடாது. சோனியா, அவரது பாதுகாவலர் ஜார்ஜ், அவரது அரசியல் ஆலோசகர் அகமது படேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம்நபி ஆசாத் ஆகிய ஐந்து பேர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலைமை மாற வேண்டும். டெல்லியில் போய் யாராவது ஒருவரைக் காக்கா பிடித்தால் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு தொகுதியைப் பிடித்து விடலாம் என்ற நிலையும் மாற வேண்டும்.

தமிழகத்துப் பிரச்னைகளுக்குத் தேவையான முடிவை, தீர்வை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரே எடுக்கலாம், அவரே நிர்வாகிகளை நியமித்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு சுதந்திரம் தரப்பட வேண்டும். இதேபோன்ற நிலைமை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுமானால் ராகுல் வரவு, காங்கிரஸுக்கு நல்வரவு ஆகும்.

 சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!

'இந்திய வாக்காளர்களில் படித்தவர்களும் படிக்காதவர்களும் சாதி பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள்’ என்று, இந்தியப் பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு கூறி இருக்கிறாரே... இதுசரியா?

கழுகார் பதில்கள்!

இல்லை!  தன்னுடைய சாதி பெரும்பான்மையாக இருக்கிறது என்று சொல்லி ஒரு வேட்பாளர் போட்டியிட்டு. வெற்றியும் பெறுகிறார். அதே வேட்பாளர் அடுத்த தேர்தலில் தோற் கிறார். என்ன காரணம்? அந்த சாதிக்காரர்கள் அனைவரும் வேறு தொகுதிக்கு போய்விட்டார்களா? அல்லது சாதி மாறி விட்டார்களா? உண்மையான காரணம் அது அல்ல!

சாதி ரீதியாக வாக்களிப்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். எனவே, தனது சாதிக்காரர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் நின்றால் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்கிற நப்பாசையால் நிறுத்தப்படுகிறார்கள். விஜயகாந்த் வென்ற தொகுதியில் அவரது சாதியினர் இருக்கிறார்களா? வைகோ போட்டியிட்ட தொகுதியில் அவர் சாதியினர் அதிகம். ஆனால் தோற்றார். அண்ணா, காஞ்சிபுரத்தில் தோற்றதும் காமராஜர், விருதுநகரில் வெற்றி பெறாமல் போனதும் எதனுடைய அடையாளம்? அவரவர் சொந்த சாதிக்காரர்கள் ஏன், அவ்வளவு பெரிய தலைவர்களுக்கே வாக்களிக்கவில்லை? வன்னியர் அதிகம் உள்ள தொகுதிகளாகக் கேட்டு வாங்கி நின்ற பா.ம.க. 7 எம்.பி. தொகுதியிலும் தோற்ற உதாரணமும் இங்கே உண்டு. எனவே, சொந்த சாதிக்காரர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பது அரசியல் கட்சிகளின் மாயத் தோற்றம். அதை மார்க்கண்டேய கட்ஜு எப்படி வழி மொழிகிறார் எனத் தெரிய​வில்லை.

 செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்

கழுகார் பதில்கள்!

அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்குப் பிறகு யார்?

அப்படி யாரும் இல்லை என் பதால்தான் அனைத்து விளம்பரங்​களிலும் 'நிரந்தரப் பொதுச் செயலாளர்’ என்ற அடைமொழி ஜெயலலிதாவுக்குத் தரப்படுகிறது!

 மு.நடராஜன், திருப்பூர்-7.

கழுகார் பதில்கள்!

தமிழக அரசின் பொங்கல் பரிசை 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் நிராகரித்து இருக்கிறார்களே?

அதை நிராகரிப்பு என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. வாங்கும் தேவை இல்லாதவர்கள் வாங்​காமல் இருந்தது வரவேற்கத்தக்க விஷயம்​தான்!

கழுகார் பதில்கள்!