ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

களத்துக்கு வரும் துரை தயாநிதி!

கணக்குப் போடும் அழகிரி...இளைஞர் அணிச் செயலாளர் பதவி...

##~##

துரை தயாநிதியை அரசியலுக்கு கொண்டு வராமல், அழகிரியின் அடிப்பொடிகள் விட மாட்டார்கள் போலிருக்கிறது. 'மாநில இளைஞர் அணி செயலாளர்’, 'வருங்கால மத்திய அமைச்சர்’ என்ற கோஷங்களோடு துரை தயா நிதியை தூக்கிக் கொண்டாடுகிறார்கள் அஞ்சா நெஞ்சனின் அடலேறுகள்!

 வழக்கமாக, பொது நிகழ்ச்சிகளுக்குப் போனால் அப்பாவுக்குப் பின்னால் மறைந்து கொள்ளும் துரை தயாநிதி, இப்போது தனிஆளாக விழாக்களுக்கு போக ஆரம்பித்து இருக்கிறார். அழகிரி யும் தன்னால் கலந்து கொள்ள முடியாத நிகழ்ச்சிகளுக்கு மகனை அனுப்பி வைத்து பயிற்சி அளிக்கிறார். அழகிரியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள முனியாண்டி கோயிலுக்கு சொந்தமான பழைமையான எட்டுக்கால் மண்டபம் புதுப் பிக்கப்பட்டது. மண்டபத் திறப்பு விழாவை அழகிரி சார்பாக திறந்து​ வைக்க அனுப்பப்பட்டார் துரை தயாநிதி.  

களத்துக்கு வரும் துரை தயாநிதி!

ஜனவரி 26-ல் மண்டபத் திறப்பு விழா. 'மதுரையே, எழுச்சியே, இளஞ்சூரியனே’ என்று, திரும்பிய பக்கம் எல்லாம் துரையை வரவேற்று ஃபிளெக்ஸ்கள் கண்ணைப் பறிக்க, ஆயிரம் வாலாக்கள் காதைக் கிழிக்க, கறுப்பு-சிவப்பு கரை வேஷ்டியில் அசத்த​லாக வந்து இறங்கினார் துரை தயாநிதி.

'அஞ்சா நெஞ்சரின் அருந்தவப் புதல்வர் வரும்போது பெண்கள் எல்லோரும் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கணும். ஆரத்தி தட்டுக்கு அம்பது ரூபா நிச்சயம்’ என்று முன்கூட்டியே

களத்துக்கு வரும் துரை தயாநிதி!

கவுன் சிலர் அருண்குமார் மைக்கில் அலர்ட் செய்து இருந்ததால், வீட்டுக்கு வீடு ஆரத்தி தட்டும் கையு​மாக காத்திருந்தனர் பெண்கள்.

இரண்டு பக்கமும் வீடுகள் கொண்ட அந்த குறுகிய சந்துக்குள் நடந்தபோது மாடிகளில் இருந்து செவ்வந்தி பூக்களைத் தூவி துரைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஐம்பது ரூபாய் கரன்ஸி கட்டு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு, ஆரத்தி எடுத்தவர்கள் அனைவருக்கும் தட்சணை கொடுத்துக்கொண்டே வந்தார் அருண்குமார்.

முனியாண்டி சாமி கோயிலில் பரிவட்டம் கட்டிக்கொண்டு மாலை மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு, எட்டுக்கால்

களத்துக்கு வரும் துரை தயாநிதி!

மண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் துரை தயாநிதி.

அழகிரி பிறந்த நாளுக்காக ரத்த தான நிகழ்சியைத் தொடங்கி வைக்க வந்த துரை தயாநிதி, 'நானும் ரத்த தானம் கொடுக்கிறேன்’ என்று ரத்த தானம் செய்தார்.

துரை தயாநிதி திடீர் வேகம் எடுத்திருப்பது குறித்து நம்மிடம் பேசிய அழகிரி விசுவாசிகள், ''அடுத்த கட்டமா தென் மாவட்டங்கள் அனைத்திலும் கழகத் தினர் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளிலும் கழக விழாக்களிலும் கலந்துக்குவாரு. நீதிமன்றச் சிக்கல்கள் தீர்ந்ததும் கட்சி அறிவிக்கும் போராட்டங்களிலும் துரை களத்துக்கு வருவார். அதுக்கு ஏதுவாக  மாநில இளைஞர் அணிச் செயலாளர் பதவியை துரைக்கு கொடுக்கணும்னு அண்ணன் எதிர்பார்க்கிறாரு'' என்கிறார்கள்.

துரை தயாநிதியிடம் கேட்டதற்கு, ''10 வருஷத்​துக்கு முந்தி அப்பா எந்தப் பொறுப்பிலும் இல்லாமத்​தான் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க ஆரம்பிச்சார். பதவி இருந்தாதான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்னு இல்லை. நல்ல மனசு இருந்தா போதும். அந்த மனசு இருக்கிறதாலதான் மக்க​ளுக்கு உதவிகளைச் செய்றோம். எங்கள் மீது நம்பிக்கையும் பிரியமும் வைத்திருக்கிற கழகத்தினர் விரும்பி அழைக்கும்போது அந்த நிகழ்ச்சிகளுக்கு போகாமல் இருந்தால், அவர்கள் மனது புண்படும். அதனால் ஒப்புக்கொள்கிறேன். கட்சிக் குடும்பத்தில் பிறந்துட்டாலே, நானும் கட்சிக்​காரன்தானே? துரை பதவிக்கு வந்தால் தங்களுக்கு எதிர்காலம் சிறப்பா இருக்கணும்னு நினைக்கிறது விசுவாசிகளோட விருப்பமா இருக்கலாம். ஆனால், கட்சியில் நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. கட்சியின் அடி மட்டத் தொண்டனாக என்னால் முடிந்ததை செய்வேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என் பதை காலம் தீர்மானிக்கட்டும்'' என்றார்.

உதயசூரியன் கட்சியில் அடுத்த அத்தியாயம் உதயமாகி விட்டது!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி