Published:Updated:

60 நாட்களில் குடும்ப அட்டை வழங்க அமைச்சர் உத்தரவு!

Vikatan Correspondent
60 நாட்களில் குடும்ப அட்டை வழங்க அமைச்சர் உத்தரவு!
60 நாட்களில் குடும்ப அட்டை வழங்க அமைச்சர் உத்தரவு!
60 நாட்களில் குடும்ப அட்டை வழங்க அமைச்சர் உத்தரவு!

சென்னை: புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் உரிய ஆய்வுக்குப்பின் தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டுமென்று அலுவலர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் உதவி ஆணையாளர் அலுவலகங்களில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, புதிய குடும்ப அட்டை கோரியும், முகவரி புதிய குடும்ப அட்டை கோரியும், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கென மனு செய்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களது வேண்டுகோள் மீது உடனடியாக தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வின் பொழுது புதிய குடும்ப அட்டைகளையும், மனுதாரர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

தியாகராய நகர் உதவி ஆணையாளர் அலுவலகத்தை ஆய்வு செய்த அமைச்சர், இந்த அலுவலகம் சேதமடைந்த நிலையில் பழைய வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதாலும், பொதுமக்களுக்கு வசதி குறைவாக காணப்படுவதாலும் இந்த அலுவலகத்தை சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ஆயிரம் விளக்கு உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு மாற்றுவது குறித்து செயலர் மற்றும் ஆணையாளர் ஆகியோருடன் ஆய்வின் போது ஆலோசனை நடத்தினார்.

புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்களுக்கு, 60 நாட்களுக்குள் உரிய ஆய்வுக்குப்பின் தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டுமென்றும், மனுக்களை நிராகரிக்கும் பொழுது அதன் விவரம் மனுதாரர்களுக்கு தாமதமின்றி தெரியப்படுத்த வேண்டுமென்றும், செல்லிடை பேசி அல்லது இ-மெயில் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மனுவின் நிலை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் குறுந்தகவல், இ மெயில் மூலமாக தவறாமல் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் சம்பயதப்பட்ட துணை ஆணையாளர் (ந) வடக்கு / தெற்கு / மண்டல உதவி ஆணையாளர்கள் ஆகியோரின் செல்லிடை பேசியில் குறுந்தகவல் மற்றும் இ-மெயில் முகவரிக்கு கோரிக்கைகள் அனுப்பியும் தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணைய தளத்தில் (www.consumer.tn.gov.in) அளிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டைகள் வழங்குதல், குடும்ப அட்டைகளில் கோரப்படும் மாற்றங்களை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள், மக்கள் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதியும், நுகர்வோரின் குறைகளைக் களையவும், சென்னையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்றும் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்றும், மாவட்டங்களில் , மாவட்டங்களில் இரண்டாம் வெள்ளிக்கிழமையன்றும் நுகர்வோர் குறைதீர் முகன்றும் நுகர்வோர் குறைதீர் முகாம்களை நடத்தி வருகிறது.

நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க சென்னை மாநகரில் உள்ள அந்தந்த மண்டல அலுவலக உதவி ஆணையாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் சேப்பாக்கம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் புகார் பிரிவையும் தொடர்புகொள்ளுவதற்கு வசதியாக 9445464748, 7299998002, 8680018002, 7200018001  ஆகிய செல்பேசி எண்களுக்கு குறுஞ்செய்திகளும், 729900 8002, 868002 8003, 8680028003, 7200048002 ஆகிய செல்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.