ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

அத்வானியின் அஸ்திரம்... பலியான கட்காரி

அத்வானியின் அஸ்திரம்... பலியான கட்காரி

##~##

ந்திய தேசியக் காங்கிரஸுக்கு மாற்றாக இருக்கும் தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இதுவரை ஒன்பது பேர் தலைவர் பதவி வகித்து இருக்கின்றனர். இவர்கள் பதவி விலகிய சூழ்நிலை பலத்த சர்ச்சைக்குரியது. இப்போது கண்ணீர் மல்க வெளியேறி இருக்கிறார் நிதின் கட்காரி. 

பி.ஜே.பி-யின் தலைமை அலுவலகத்தை ஒரு கார்ப் பரேட் அலுவலகத்துக்கு இணையாகப் புதுப்பித்​தவர் நிதின் கட்காரி. புகையிலையையும் பீடாவையும் மென்று உமிழும் வடஇந்திய கலாசாரத்தையும் மீறி இதைச் செய்தார். எலெக்ட்ரானிக் சாதனங்கள் அடங்கிய அறைகள், அனைத்து அமைப்புகளுக்கும் தனித்தனி அறைகள், நவீன ஆடிட்டோரியம் என ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தின் மாடலாக பி.ஜே.பி. அலுவலகத்தை மாற்றினார். தனது புதிய அறைக்குத் திறப்பு விழா நடத்தி அமருவதற்குள் அவரது பதவி பறிக்கப்பட்டு விட்டது.

அத்வானியின் அஸ்திரம்... பலியான கட்காரி

கடந்த 2009 டிசம்பரில் நிதின் கட்காரி, பி.ஜே.பி. தலைவர் பதவியை ஏற்றார். அவருடைய  மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு ஒருமுறை பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பி.ஜே.பி-யின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ். தனது விருப்பத்தைத் தெரிவிக்க, கட்சி

அத்வானியின் அஸ்திரம்... பலியான கட்காரி

இதற்கான ஏற்பாடுகளுடன் இருந்தது. ஜனவரி 23-ம் தேதி புதிய தலைவருக்கான தேர்தல். ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவி கிடைக்காததால் கட்காரி மீது விரோதம் கொண்ட யஷ்வந்த் சின்ஹா போன்றோர் எதிர்த்துப் போட்டியிடலாம் என்ற தகவல் இருந்தாலும் கட் காரியே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நிலைமை உறுதியானது. ஆனால், அதே 22-ம் தேதி கட்காரி சம்பந்தப்பட்ட பூர்த்தி நிறுவன அலு வலகங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை நடந்த நான்கு மணி நேரத்தில் எல்லா கதையும் மாறி விட்டது.  கட்காரியைக் கவிழ்ப்பதில் நான்கு முனைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

ஒன்று, தன்னை மதிக்காத ஆர்.எஸ்.எஸ்-ஸைப் பழிவாங்க சமயம் பார்த்துக்கொண்டு இருந்தார் எல்.கே.அத்வானி. இரண்டு, தங்கள் மீது ஊழல் குற்றம் சாட்டிய கட்காரியை ஆளும் காங்கிரஸ் சுற்றி வளைத்தது. மூன்று, கட்காரிக்கு எதிரான உட்கட்சி பூசல். நான்கு, ஊழலுக்கு எதிரான அமைப்புகளும் மீடியாக்களும் கட்காரியைப் போட்டுத் தாக்கின.

பி.ஜே.பி. தலைவர் என்ற முறையில் நிதின் கட்காரி தனது கட்சியை ஆளும் மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பினார். குறிப்பாக, 2ஜி ஊழல்கள் முதல் நிலக்கரி ஊழல்கள் வரை காங்கிரஸுக்கும் சோனியாவுக்கும் தொடர்பு உண்டு என்ற தகவல்களை வைத்து தனது கட்சிப் பேச்சாளர்கள் மூலம் ஆளும் கட்சியைக் கலக்கிக்கொண்டு இருந்தார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிதின் கட்காரியின் சொத் துக்கள் அவர் சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் குறித்த தகவல்களையும் மத்தியி​லுள்ள ஆளும் கட்சி கிளறியது. இதை காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங் போன்றோர் தனியார் தொலைக்காட்சிகள், பத்தி ரிகைகள் வாயிலாக வெளி​யிட்டு கட்காரியை சாடினர். உச்சகட்டமாக, சமூக விழிப்பு உணர்வு புயல் அரவிந்த் கெஜ் ரி​வாலையும் காங்கிரஸ் பயன்​படுத்திக்கொண்டது.

மகாராஷ்ட்ராவில் நீர்ப்பாசனத்துக்கு கையகப்படுத்தப்​பட்ட நிலங்​களில் சுமார் நூறு ஏக்கர் வரை அந்த மாநில அமைச்சர் அஜீத் பவாருடன் சேர்ந்து கட்காரி தன்னுடைய நிறுவனங்களுக்காக அபகரித்துக்​ கொண்டதாகப் புகார் சொல்லப்பட்டது. கெஜ்ரிவாலோடு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த சமூகசேவகி அஞ்சலி தமானியாவும் கட்காரியை குற்றம் சாட்டினார். மகாராஷ்ட்ரா

அமைச்சர் அஜீத் பவாரின் நீர்ப்பாசன ஊழலைக் கிளறிய விவகாரத்தில் கட்காரி தன்னை சமாதானப்படுத்தியதாகக் கூறி சர்ச் சையைக் கிளப்பினார் அஞ்சலி தமானியா. இதையட்டி, அத்வானியின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் ராம் ஜெத்மலானி, மகேஷ் ஜெத்மலானி போன்றோர் கட்காரியைப் பதவி விலகக் கூறினர். இவர்கள் மட்டுமல்ல, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா போன்றோரும் இதே வரிசையில் கட்காரியின் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பினர்.

இதோடு கட்காரியின் விவகாரம் நிற்க​வில்லை. கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி  நிறுவனத்தில் யார் யார் முதலீடு செய்துள்ளனர்? யார் யார் இயக்குநர்களாக உள்ளனர் போன்ற செய்தி​களும் வந்தன. கட்காரியின் பதவி நீட்டிப்பு அறிவிப்புக்கான நேரம் நெருங்க நெருங்க வேறு சில தொல்லைகளும் கட்காரிக்கு வந்தன. பி.ஜே.பி-யின் ஒரு சாரார் கட்காரியின் காலை வார, மத்திய அரசின் நிதி அமைச்சகத்தோடு கைகோத்தனர். இந்த எதிர் கோஷ்டியில் முக்கிய மானவர் அருண் ஜெட்லி. கட்காரிக்கும் ஜெட்லிக்கும் யாரை யார் மதிப்பது என்ற ஈகோ. கட்காரி யாருக்கு ஆதரவாக இருப்பார்? சுஷ்மாவுக்கா? மோடிக்கா? என்ப​திலும் பி.ஜே.பி. தலைவர்கள் மத்தியில் சந்தேகம் உண்டு. இவர்களில் உச்சகட்ட கோபத்தில் இருந் தவர் எல்.கே.அத்வானி. ஆர்.எஸ்.எஸ்-ஸின் பிரதி நிதியாக இருக்கும் நிதின் கட்காரி, கட்சியில் தலைவராக இருப்பதில் அத்வானிக்கு சிறிதும் விருப்பம் இல்லை. இதனால், கட்காரியை வீட்டுக்கு அனுப்புவதற்கு இந்த பூர்த்தி குழும  விவகாரங்களைப் பயன்படுத்த ஆயத்தமானார் அத்வானி. கட்காரியைக் கவிழ்ப்பதில்  தனக்கு வலது இடது கையாக இருக்கும் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் போன்றோரையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டார்.

அத்வானியும் நிதின் கட்காரியும் மும்பையில் ஒரு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திடம், ''கட்காரியை மீண்டும் நியமித்தால் 2014 தேர் தலில் காங்கிரஸின் ஊழலை எதிர்த்து நாம் எப்படிப் பிரசாரம் செய்ய முடியும்? இந்த சமயத்தில் நம் கட்சித் தலைவரே திஹார் ஜெயி லில் இருந்தால் நிலைமை என்ன ஆகும்?'' என்று அதிர்ச்சி ஏற்படுத்தினார் அத்வானி.

அடுத்த சில மணி நேரங்களில், தங்களுக்குப் பிடித்த ராஜ்நாத் சிங்கை அடுத்த தலைவராக நியமிக்கலாம் என்று, ஆர்.எஸ்.எஸ். சொல்ல அத் வானியும்  உடனடியாக ஒப்புக்கொண்டார். இப்படித்தான் நடந்தது கட்காரியை ஓரங்கட்டும் நிகழ்வு!

- சரோஜ் கண்பத்

 அத்வானி அடித்த கல்லில் விழுந்த இரண்டு மாங்காய்கள்

  ராஜ்நாத் சிங் பதின்மூன்று வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இருந்து பி.ஜே.பி-யின் உ.பி. மாநிலத் தலைவர் பதவி வரை வளர்ந்தவர். பிறகு, மத்தியில் சாலைப் போக்குவரத்து மற்றும் விவசாயத் துறை அமைச்சராகி உ.பி. மாநில முதல்வராகவும் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு எப்போதும் கட்டுப்பட்டவர். அத்வானியை ஜின்னா விவகாரத்தில் நீக்கும்போது அவருக்குப் பதிலாக 2005-ல் ராஜ்நாத் சிங்தான் பி.ஜே.பி-யின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஊழல் விவகாரங்களில் பெரிதாகச் சிக்காதவர் என்றாலும் உ.பி-யில் தனது இனத்தைச் சேர்ந்த தாகூர்களைக் கொண்டு பல கிரிமினல்களை வளர்த்தவர் என்ற புகார் உண்டு.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து இருக்கிறார் அத்வானி. ஆர்.எஸ்.எஸ்-ஸின் செல்லப்பிள்ளை கட்காரியை வீழ்த்தியது முதல் மாங்காய்.

கட்சியின் முக்கிய அமைப்பான பார்லிமென்ட் போர்ட் பொறுப்பிலிருந்து மோடியை நீக்கியவர் இதே ராஜ்நாத் சிங். அதனால், ஏற்கெனவே மோடிக்கும் அவருக்கும் உரசல் உண்டு. ராஜ்நாத் சிங்கை வைத்து மோடியைக் கட்டுப் படுத்தலாம் என்பது இரண்டாவது மாங்காய்.