Published:Updated:

3, 4 அணுஉலை பணியை தடுக்க ஜெயலலிதாவிற்கு உதயகுமார் கோரிக்கை!

Vikatan Correspondent
3, 4 அணுஉலை பணியை தடுக்க ஜெயலலிதாவிற்கு உதயகுமார் கோரிக்கை!
3, 4 அணுஉலை பணியை தடுக்க ஜெயலலிதாவிற்கு உதயகுமார் கோரிக்கை!
3, 4 அணுஉலை பணியை தடுக்க ஜெயலலிதாவிற்கு உதயகுமார் கோரிக்கை!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4 அணுஉலைகளுக்கான பணிகளை தடுத்து நிறுத்த கோரி முதல்வர் ஜெயலலிதாவிற்கு கூடங்குளம் அணுஉலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் இன்று அனுப்பியுள்ள மனுவில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி நடந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். 2 பேர் 70 சதவீத தீக்காயத்துடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு மாதமாகியும் அவர்களை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதுபோல, 2013 ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு 5.2 கோடி ரூபாய்க்கு மருத்துவச் செலவு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான தொகை கண் சம்பந்தப்பட்டப் பிரச்னைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் வாழும் பொதுமக்களும் இம்மாதிரியான நோய்களுக்கு ஆளாகியிருக்க

3, 4 அணுஉலை பணியை தடுக்க ஜெயலலிதாவிற்கு உதயகுமார் கோரிக்கை!

வேண்டும். ஆனால் அம்மக்களுக்கு யாரும் எந்தவிதமான உதவியும் இதுவரை செய்யவில்லை.

கூடங்குளம் அணுமின் திட்டம் இப்படிப்பட்ட பிரச்னைகளோடு தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதை ஜனநாயக முறையில் அறவழியில் எதிர்த்துப் போராடும் எங்கள் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அப்படியே இருக்கின்றன. முந்தைய காங்கிரஸ் அரசு தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளுக்கு ஒப்பந்தம் போட்டது.

தற்போது 3 மற்றும் 4 அணுஉலைகளுக்கான கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 5 மற்றும் 6 அணுஉலைகளுக்கான அலுவலக கட்டிடங்களும் கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்தத் திட்டங்களெல்லாம் துவக்க நிலையில் இருப்பதால், தாங்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அதனை தடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.